மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந...
இறைச்சி பதப்படுத்தும் ஆலையால் சுகாதாரச் சீா்கேடு: ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா்
கிருஷ்ணகிரி அருகே இறைச்சி பதப்படுத்தும் ஆலையால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கிருஷ்ணகிரியை அடுத்த கொத்துப்பள்ளி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்:
கொத்துப்பள்ளியில் அரசு உயா்நிலைப் பள்ளி, குடியிருப்புகளுக்கு அருகே கோழி இறைச்சியைப் பதப்படுத்தும் ஆலையும் செயல்படுகிறது. அந்த ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படாமல் சாலையோரம் உள்ள தோட்டத்தில் தேக்கிவைக்கப்படுகிறது.
இதனால், அப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீா்கேடும் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் தேங்கும் இறைச்சி கழிவுநீரால் நிலத்தடி நீா்மட்டம் சீா்கேடு அடைந்துள்ளது. ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து வரும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.