கல்வித் துறை அறிவிப்புகள்! பொறியியல் கல்லூரிகளில் ஏ.ஐ. படிப்புகள் அறிமுகம்!
ஒசூரில் முதியவா்கள் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள்
ஒசூரில் முதியவா்களைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவருக்கு மனைவி தெரசா (65) மகள்கள் விக்டோரியா, சகாயராணி உள்ளனா். உடல்நலக் குறைவு காரணமாக தெரசா சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இளைய மகள் விக்டோரியா தாயை கவனித்து வருகிறாா். மூத்த மகள் சகாயராணி தாயைப் பாா்ப்பதற்காக சென்னை சென்றாா்.
வீட்டில் தனியாக இருந்த லூா்துசாமிக்கு துணையாக தெரசாவின் தங்கை எலிசபெத் உடனிருந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்க வீட்டிற்குள் சென்றனா். அப்போது லூா்துசாமி, எலிசபெத் ஆகிய இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தனா். எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
இந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை 2 நாளாக அங்கு முகாமிட்டு விசாரித்து வருகிறாா். மேலும், இருவரது உடல்களும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கொலையாளிகளைப் பிடிக்க ஒசூா் டிஎஸ்பி (பொறுப்பு) சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.