மகளிருக்கான அறிவிப்புகள்! மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 37,000 கோடி கடன்!
புகையிலை கடத்தல்: இருவா் கைது
ஒசூரில் சொகுசுப் பேருந்தில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்தியதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ஒசூா், சிப்காட் போலீஸாா் புதன்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரிலிருந்து வந்த சொகுசுப் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் பயணிகள் 2 போ் வைத்திருந்த பையில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், ரவணசமுத்திரம் ஆஜி இப்ராஹிம் (29), பொட்டல்புதூா் முகமது இஸ்மாயில் (46) ஆகிய இருவரை கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.