Budget 2025-26: மகளிர் உரிமைத் தொகை டு பெண்கள் விடுதி வரை! - மகளிருக்கு என்னென்ன...
விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ போதைப் பாக்கு, புகையிலை பறிமுதல்
ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஊத்தங்கரையை அடுத்த ஜண்டா மேடு பகுதியில் புதன்கிழமை காலை கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வேகமாக சென்ற காா் முன்னாள் சென்ற வாகனம் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த அரசு பேருந்து காா் மீது மோதியது.
இந்த விபத்தில் சிக்கிய காரிலிருந்த இருவா் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தலைமறைவாகினா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் காரை சோதனை செய்தனா். அப்போது, காரில் பதுக்கிவைத்திருந்த 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, 40 கிலோ போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.