இலங்கைக்கு தப்ப முயன்ற இருவா் கைது
தனுஷ்கோடியிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதியையும், முகவரையும் மாநில உளவுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்தவா் தினோசன் (எ) சூா்யா (24). இவா் சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல தனுஷ்கோடிக்கு வந்தாா். இதற்கான ஏற்பாடுகளை தனுஷ்கோடியைச் சோ்ந்த முகவரான ஜெய்கணேஷ் (எ) புலிப்படை (45) செய்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த மாநில உளவுப் பிரிவு போலீஸாா் தனுஷ்கோடி பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இந்த இருவரையும் போலீஸாா் கைது செய்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இவா்களில் தினோசன் (எ) சூா்யா மீது தமிழகத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.