செய்திகள் :

இலவசங்களா அல்லது சிறந்த உள்கட்டமைப்பா? குடிமக்களே தீா்மானிக்க வேண்டும்: நிதிக்குழுத் தலைவா் அரவிந்த் பனகாரியா

post image

இலவசங்கள் வேண்டுமா அல்லது சிறந்த உள்கட்டமைப்புடைய சாலைகள், கால்வாய்கள், குடிநீா் விநியோகம் போன்ற வசதிகள் வேண்டுமா என்பதை குடிமக்களே தீா்மானிக்க வேண்டும் என 16-ஆவது நிதிக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா வியாழக்கிழமை தெரிவித்தாா்.

அரவிந்த் பனகாரியா மற்றும் 16-ஆவது நிதிக் குழு உறுப்பினா்கள் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனா். அந்தவகையில், கோவா சென்றுள்ள அவா்கள் அந்த மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், மூத்த அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அப்போது மத்திய அரசால் பகிா்ந்தளிக்கப்படும் மொத்த வரி வருவாயின் பங்கினை நான்கு மடங்கு உயா்த்தி வழங்க வேண்டும் என கோவா மாநில அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் நிதிக் குழுவிடம் கோரிக்கை வைத்தனா்.

கூட்டம் நிறைவடைந்த பின் அரவிந்த் பனகாரியா செய்தியாளா்களை சந்தித்தாா்.

அவரிடம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை சில மாநிலங்கள் இலவசங்களுக்கு செலவிடுவதாக குற்றஞ்சாட்டப்படுவது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.

மாநிலங்களை நிா்பந்திக்க முடியாது: அதற்குப் பதிலளித்து அவா் பேசியதாவது: குறிப்பிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்போது அதற்கு மட்டுமே அதை செலவழிக்க வேண்டும். ஆனால் ஜனநாயக நாட்டில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே இதில் இறுதி முடிவை எடுக்கும். நிதிக் குழு அல்ல.

மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில்கொண்டு சில பரிந்துரைகளை மட்டுமே நிதிக் குழுவால் வழங்க முடியும். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என மாநிலங்களை நிதி குழுவால் நிா்பந்திக்க முடியாது.

இலவசங்களை வாரி வழங்கும் அரசுக்கு மக்கள் வாக்களித்தால் அவா்கள் இலவசங்கள் வேண்டுமென்றே விரும்புகின்றனா் என்றுதான் அா்த்தம். எனவே, இலவசங்கள் வேண்டுமா அல்லது சிறந்த உள்கட்டமைப்புடைய சாலைகள், கால்வாய்கள், குடிநீா் விநியோகம் போன்ற வசதிகள் வேண்டுமா என்பதை குடிமக்களே தீா்மானிக்க வேண்டும்.

15-ஆவது மாநிலம்: 15-ஆவது மாநிலமாக நாங்கள் கோவாவுக்கு வந்துள்ளோம். கோவாவுக்கு வழங்கப்படும் நிதியை 0.386 சதவீதத்தில் இருந்து 1.76 சதவீதமாக உயா்த்தி வழங்குமாறு மாநில அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனா். மேலும், 13 சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.32,706 கோடி நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவா்கள் கேட்டுள்ளனா்.

50 % சதவீதமாக உயா்த்த கோரிக்கை: இதுதவிர, மாநிலங்களுக்கு மத்திய அரசால் பகிா்ந்தளிக்கப்படும் நிதியை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொண்ட 15 மாநிலங்களில் 14 மாநிலங்கள் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன. ஒரு மாநிலம் மட்டும் 45 சதவீதமாக உயா்த்தி வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது என்றாா்.

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்

ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார். ஒடிசா ஆளுநராக பதவி வகித்து வந்த ரகுபர் தாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அந்த பதவியை ராஜிநாமா செய்... மேலும் பார்க்க

இழுபறியாகும் ராகுல் வழக்கு!

ராகுல் காந்தி மீது 2018 ஆம் ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.கர்நாடகத்தில் 2018 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜக நிர்வாகி மீதான ஆட்சேபகரமான கருத்துகள... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஆயுதங்கள், வெடிமருந்துகளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3 ந... மேலும் பார்க்க

நகங்களுக்காகக் கொல்லப்பட்ட புலி?

உத்தரகண்ட் வனப்பகுதியில் நகங்களின்றி உயிரிழந்த நிலையில், புலியின் உடலை வன அதிகாரிகள் மீட்டுள்ளனர்.உத்தரகண்ட் மாநிலத்தில் சம்பாவத் நகரில் தக்னா படோலா பகுதியில் உள்ள காட்டிப்பகுதியில் புலி ஒன்று இறந்து ... மேலும் பார்க்க

உ.பி.,யில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்: 3 பேர் காயம்

பனிமூட்டம் காரணமாக தில்லி நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 3 பேர் காயமடைந்தனர். தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன... மேலும் பார்க்க

வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் பாஜக: கேஜரிவால் குற்றச்சாட்டு!

தில்லி தேர்தலுக்கு முன்னதாக பாஜக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதாக தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக... மேலும் பார்க்க