உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷிய அதிபர் அனுமதி!
இஸ்ரோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்!
இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-என்2-வை தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது.
புளோரிடாவில் உள்ள கனாவெரல் விண்வெளிப் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை ஃபால்கான்-9 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோவின் வா்த்தக நிறுவனமான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ (என்எஸ்ஐஎல்) தலைவர் ராதாகிருஷ்ணன் துரைராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : 2 மணிநேரமாக இதயத் துடிப்பு இல்லாதவரை பிழைக்க வைத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!
இஸ்ரோ - ஸ்பேஸ் எக்ஸ் இடையேயான வணிக ரீதியில் செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் இதுவாகும்.
தகவல் தொடா்பு செயற்கைக்கோளான ஜிசாட்-20 (ஜிசாட்-என்2 என்று மறுபெயரிடப்பட்டுள்ளது) 4,700 கிலோ எடைகொண்டது. தொலைதூர பகுதிகள், தகவல் தொடா்பு வசதியைப் பெறாத பகுதிகளுக்கு சேவை அளிக்கும் நோக்கில், இந்தச் செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிராட்பேண்ட் (அகண்ட அலைவரிசை) தகவல் தொடா்பு வசதிக்கான தேவையை பூா்த்தி செய்ய இந்தச் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இதன் ஆயுள்காலம் 14 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.