செய்திகள் :

ஈரானில் அலுவலகங்கள் மூடல்.. பணி நேரம் குறைப்பு! தவிக்கும் மக்கள்! என்ன காரணம்?

post image

ஈரான் நாட்டின் 22 மாகாணங்களின் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதுடன், 4 மாகாணங்களில் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானில் கடுமையான வறட்சி நிலவி வரும் சூழலில், அங்குள்ள பல்வேறு மாகாணங்களில் வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டில் கடுமையான தண்ணீர் மற்றும் மின்சாரம் பற்றாக்குறை உருவாகியிருப்பதால், 22 மாகாணங்களில் அரசு அலுவலகங்கள் முழுவதுமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மீதமுள்ள 4 மாகாணங்களில் பணி நேரம் 4 மணிநேரமாகக் குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2024-ம் ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிய நடப்பு நீர் ஆண்டில், மழைப்பொழிவு வழக்கத்தை விட 40 சதவிகிதம் குறைந்துள்ளதாக, ஈரானின் நீர்வளம் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன், ஈரான் நாட்டிலுள்ள பெரும்பாலான அணைகளில் வெறும் 44 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகவும், ஹோர்மோஸ்கன் மற்றும் ஃபார்ஸ் போன்ற தெற்கு மாகாணங்களின் அணைகள் முழுவதுமாக வறண்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு அதிபர் மசூத் பெசேஷ்கியன், நாடு முழுவதும் நிலவும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க உடனடி நடவடிக்கைகள் தேவை என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஈரானில் அத்தியாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உருவாகியுள்ளதால், அங்குள்ள பொது மற்றும் தனியார் நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தென் கொரியா வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 23 ஆக உயர்வு!

Government offices in 22 provinces of Iran have been closed and working hours have reportedly been reduced in 4 provinces.

ஓவியங்களைக் கிழித்து, சட்டகங்களை எரித்த பாலஸ்தீன ஓவியர்..! அர்த்தமிழக்கும் கலைகள்!

காஸாவில் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள உணவுப் பஞ்சத்தினால் பாலஸ்தீன ஓவியர் ஒருவர் தனது ஓவியங்களைக் கிழித்து, அதன் சட்டகங்களை உணவுக்காக பயன்படுத்திய விடியோ வைரலாகி வருகிறது. பாலஸ்தீன ஓவியர் டாஹு அபு காலி ... மேலும் பார்க்க

ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 6 பேர் பலி

ஈரானில் நீதிமன்றக் கட்டடத்தின் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். தென்கிழக்கு ஈரானில் உள்ள நீதிமன்றக் கட்டடத்தின் மீது சனிக்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி... மேலும் பார்க்க

தாய்லாந்துடன் ஹிந்து கோயில் பிரச்னை! போர் நிறுத்தம் கோரும் கம்போடியா!

தாய்லாந்து நாடுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர, போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையில் நீண்ட காலமாக எல்லைப் பிர... மேலும் பார்க்க

280 கிராம்.. 21 வாரத்தில் பிறந்த குழந்தை! கின்னஸ் சாதனையுடன் முதல் பிறந்தநாள்!!

அமெரிக்காவின் லோவா மாகாணத்தில் 21 வாரங்களில் மிகக் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை, உலகிலேயே மிகக் குறைந்த நாள்களில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்ற கின்னஸ் சாதனையுடன் தனது முதல் பிறந்தநாளைக் கொ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயா்வு

பாகிஸ்தானில் கனமழை தொடா்பான சம்பவங்களில் மேலும் 14 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்ததாவது: ஜூன் 2... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபா் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளாா். இந்த முடிவு செப்டம்பா் 2025 இல் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க