செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதி: ஜன.17-இல் திமுக வேட்புமனு தாக்கல்

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனவரி 17ஆம் தேதி திமுக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது.

விதிமுறை மீறல்கள் இல்லாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அறிவுறுத்திய அமைச்சர் முத்துச்சாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஈரோடு இடைத்தேர்தல் அடித்தளமாக இருக்கும் என்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பாஜக ஆலோசனை

வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. 17ஆம் தேதி வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளாகும். பிப்.8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிஸ் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில் நாதக கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் பாஜக தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடையலாம்: வி. நாராயணன்

கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் என இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி. நாராயணன் தெரிவித்தார்.இஸ்ரோவின் 11-ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இவர்... மேலும் பார்க்க

பொங்கல் விடுமுறை: சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை : தைப்பொங்கல் திருநாள் வரும் செவ்வாய்க்கிழமை(ஜன. 14) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொது விடுமுறை நாளான அன்று, சென்னையில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாஜக புறக்கணிப்பு

அதிமுகவைத் தொடர்ந்து பாஜகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த... மேலும் பார்க்க

அரசியலமைப்பை அவமதித்து விட்டார் முதல்வர்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தேசிய கீதம் விவகாரத்தில் அரசியலமைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துவிட்டார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்த மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- பாஜக ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக தமிழக பாஜக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அற... மேலும் பார்க்க