எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரி...
உங்க விஜய் நா வரேன்! சுற்றுப் பயணத்துக்கான தவெக லோகோ வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணம், திருச்சியில் இருந்து தொடங்கும்நிலையில், சுற்றுப் பயணத்துக்கான லோகோவையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்புடன், உங்க விஜய் நா வரேன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
“வாகை சூடும்” வரலாறு திரும்புகிறது #உங்கவிஜய்_நா_வரேன்pic.twitter.com/OlsU55Fpby
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) September 12, 2025
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சித் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் நாளைமுதல் தனது முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.