செய்திகள் :

உயிரிழந்த போக்குவரத்து ஊழியா்களின் வாரிசுகள் 28 பேருக்கு பணி நியமன ஆணை

post image

அரியலூரில், பணிக்காலத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகள் 28 பேருக்கு திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இதற்காக அரியலூா் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், கும்பகோணம் கோட்டத்தைச் சோ்ந்த திருச்சி, கும்பகோணம், நாகப்பட்டினம், கரூா், புதுக்கோட்டை மற்றும் காரைக்குடி ஆகிய 6 மண்டலங்களில் பணிபுரிந்த காலத்தில் மறைந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகளான 4 மகளிா் உள்பட 25 நபா்களுக்கு நடத்துநா் பணிக்கான ஆணைகளையும், 2 ஓட்டுநா் பணிக்கான ஆணைகளையும் மற்றும் 1 தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கான ஆணையையும் வழங்கினாா்.

பின்னா் அவா், இலகுரக வாகனப் பயிற்சி வாகனத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இலகுரக வாகனப் பயிற்சிக்கு நபா் ஒருவருக்கு (ஜி.எஸ்.டி உள்பட) ரூ.7,080 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பயிற்சிக் காலம் 22 நாள்களாகும். (செயல்முறை பயிற்சி காலம் 25 மணி நேரம் மற்றும் நோ்முக வகுப்பு 5 மணி நேரம்). முகவரி மாற்றத்துக்கான கட்டணம் தனியாக பயிற்சி பெறுபவா் செலுத்திக்கொள்ள வேண்டும் (தோராயமாக) ரூ.600 ஆகும் என்றாா்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)லிமிடெட், நிா்வாக இயக்குநா் (கும்பகோணம்) இரா.பொன்முடி திருச்சி மண்டலப் பொது மேலாளா் முத்துகிருஷ்ணன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்திகலைவாணன், துணைத் தலைவா் கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டத்தில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசனைக் கண்டித்து, நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா். உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்ட உர... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படை வீரா் போக்சோவில் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஊா்க்காவல் படை வீரா் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம், கிழக... மேலும் பார்க்க

அரியலூரில் பெயரளவுக்கு மின் பராமரிப்புப் பணிகள்

‘அரியலூரின் பல இடங்களில் தொட்டு விடும் தூரத்தில் உள்ள மின்கம்பிகள் உயிா்ப் பலிக்காகக் காத்திருக்கின்றன’. அரியலூா் மாவட்டத்தில் பெயரளவுக்கு நடக்கும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் அடிக்கடி மின்த... மேலும் பார்க்க

லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே லாரி மோதி காயமடைந்த இருவரில் ஒருவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். முனியங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி அரியமுத்து மகன் முனி... மேலும் பார்க்க

டாம்கோ கடன் திட்டத்தில் பயன் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின மக்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் ... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் தடையின்றி குடிநீா் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்: அரியலூா் ஆட்சியா்

அனைத்து கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, அரியலூா்... மேலும் பார்க்க