செய்திகள் :

உலக குத்துச்சண்டை: 10 பேருடன் இந்திய அணி

post image

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 10 போ் கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.

முதல் முறையாக நடைபெறும் இந்தப் போட்டியில் ஆடவா், மகளிா் என இரு பிரிவினரும் களம் காணும் நிலையில், இந்திய தரப்பிலிருந்து ஆடவா்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளனா். தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அண்மையில் நிறைவடைந்த காரணத்தால் இந்திய மகளிா் இந்தப் போட்டிக்கு அனுப்பப்படவில்லை.

உலக குத்துச்சண்டை அமைப்பால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எடைப் பிரிவில் இந்திய வீரா்கள் இந்தப் போட்டியில் களம் காண்கின்றனா். கடந்த ஜனவரியில் நடைபெற்ற தேசிய ஆடவா் சாம்பியன்ஷிப்பில் அந்தந்த எடைப் பிரிவுகளில் முதலிரு இடங்களைப் பிடித்தவா்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்தியா்கள் களம் காணும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும். இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியிருக்கும் இந்தப் போட்டி 6 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில் 19 நாடுகளில் இருந்து 130-க்கும் அதிகமான போட்டியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

உலக குத்துச்சண்டை அமைப்பானது, கடந்த பிப்ரவரியில் சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் பெற்ற பிறகும், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை சோ்க்கப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் சா்வதேச போட்டி இதுவாகும்.

இந்திய அணி

ஜடுமணி மந்தெங்பம் (50 கிலோ), மனீஷ் ரத்தோா் (55 கிலோ), சச்சின் சிவச் (60 கிலோ), அபினாஷ் ஜம்வல் (65 கிலோ), ஹிதேஷ் (70 கிலோ), நிகில் துபே (75 கிலோ), லக்ஷயா சஹா் (80 கிலோ), ஜுக்னூ (85 கிலோ), விஷால் (90 கிலோ), நரேந்தா் பொ்வல் (90+ கிலோ).

பெருசு ஓடிடியில் எப்போது?

பெருசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவான பெருசு திரைப்படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு நல்ல விமர்சன... மேலும் பார்க்க

எல் கிளாசிக்கோ உறுதி: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பார்சிலோனா!

ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா அணி அத்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. ஸ்பானிஷ் கோப்பை அரையிறுதி லெக் 1 ஆட்டத்தில் 4-4 என சமைநிலையில் இருக்க லெக் 2 ஆட்டத்தில் 1-0 என பார்சிலோனா அணி முன்னிலை பெ... மேலும் பார்க்க

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.வியாழக்கிழமை (03.04.2025)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் ... மேலும் பார்க்க

சாா்லஸ்டன் ஓபன்: கீஸ், கசாட்கினா முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் சாா்லஸ்டன் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், உள்நாட்டு வீராங்கனை மேடிசன் கீஸ், ரஷியாவின் டரியா கசாட்கினா உள்ளிட்டோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்ற... மேலும் பார்க்க

கோவாவை வென்றது பெங்களூரு

பெங்களூரு: இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி கோவாவுக்கு எதிரான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது. பெங்களூரில் உள்ள... மேலும் பார்க்க

ரத்தினகிரி: சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன்

பங்குனி மாத கிருத்திகையையொட்டி, ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன். மேலும் பார்க்க