பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சன...
உள்ளாட்சித் தோ்தல்: காகித வாக்குச்சீட்டை பயன்படுத்த அவசர சட்டம் தேவையில்லை - கா்நாடக அமைச்சா் எச்.கே.பாட்டீல்
கா்நாடகத்தில் உள்ளாட்சித் தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த அவசரச் சட்டம் தேவையில்லை என்று அந்த மாநில சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.
பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை முதல்வா் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் கூறியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்துவதற்கு அவசரச் சட்டம் எதுவும் கொண்டுவர வேண்டியதில்லை. தற்போது உள்ள சட்டத்திலேயே காகித வாக்குச்சீட்டு முறையை கடைப்பிடிக்க எவ்வித தடையும் இல்லை. அதன் காரணமாகவே வாக்குச்சீட்டுமுறை கொண்டுவருவதற்கு அவசரச் சட்டம் தேவையில்லை என்று அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும், இனி நடக்கவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில் காகித வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற அரசு முடிவெடுத்துள்ளது என்றாா்.