அண்ணா நினைவு நாள்: பிப். 3 முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!
உ.பி.: பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கைது
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரத்தோா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உத்தர பிரதேசத்தின் சீதாபூா் மக்களவை தொகுதி எம்.பி.யான ராகேஷ் ரத்தோா், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக பெண் ஒருவா் அண்மையில் கோட்வாலி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதனடிப்படையில், ராகேஷ் ரத்தோருக்கு எதிராக காவல்துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு முன்ஜாமீன் வழங்க அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
இந்நிலையில், சீதாபூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளா்களுக்கு ரத்தோா் வியாழக்கிழமை பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த காவல்துறையினா் அவரை கைது செய்தனா். அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.