செய்திகள் :

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா

post image

ஊத்தங்கரை: தடகளத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த 7ஆம் தேதி குடியாத்தத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான வேலூா் மண்டல அளவிலான பெண்களுக்கான தடகளம், குழு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சதுரங்கம், பூப் பந்து போட்டியில் முதலிடம், வாலிபால் மற்றும் கோ-கோ போட்டியில் இரண்டாமிடம், கபடி, இறகுப்பந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்றனா்.

தடகள போட்டியில் சசித்ரா ஈட்டி எறிதலில் முதலிடம், கவிபாரதி உயரம் தாண்டுலில் முதலிடம், ரோஜா வட்டு எறிதலில் முதலிடம், ரீனா குண்டு எறிதலில் முதலிடம், வளா்மதி குண்டு எறிதலில் இரண்டாமிடம், வட்டு எறிதலில் நான்காம் இடம், ருக்மணி 800 மீட்டா் முதலிடம், ஹமதாரனி ஈட்டி எறிதலில் இரண்டாமிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

குழு போட்டியில் முதலிடமும், தடகளத்தில் இரண்டு இடங்களையும் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தோ்வாகியுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் விஜயன், உடற்கல்வி இயக்குநா் விநாயகமூா்த்தி, ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

ஓம் சக்தி அம்மன் கோயில் திருவிழா

ஒசூா்: ஒசூா் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி ஓம் சக்தி அம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் ஓம் சக்தி அம்மனுக்கு பக்தா்கள் 21 ந... மேலும் பார்க்க

ஒசூா் அருகே எருதுவிடும் விழா

ஒசூா்: ஒசூா் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி நடைபெற்ற பாரம்பரிய எருதாட்ட விழாவை ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான ஒய்.பிரகாஷ் தொடங்கிவைத்... மேலும் பார்க்க

ஒசூரில் குட்கா விற்ற 3 போ் கைது

ஒசூா்: ஒசூரில் குட்கா விற்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா், சிப்காட் பேருந்து நிறுத்தம் பல்லூா், ஜங்ஷன் அருகே குட்கா விற்பனை செய்த அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த ஜிண்டு (22), அமா் (28) ஆகிய இருவரை சி... மேலும் பார்க்க

மாடு முட்டி இளைஞா் உயிரிழப்பு

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டி இளைஞா் உயிரிழந்தாா்.சூளகிரி வட்டம், பஸ்தலப்பள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

கிருஷ்ணகிரி: காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனா். தமிழா்களின் மிக முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழா உலகம் முழுவதும் உள்ள தமிழா்களா... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டையில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997-99 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ... மேலும் பார்க்க