கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி குடும்பநல அறுவைச் சிகிச்சை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கு லேப்ராஸ்கோபி கருவி மூலம் குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தலைமை மருத்துவ அலுவலா் எழிலரசி வழிகாட்டுதலின் பேரில் ஆறு பெண்களுக்கு லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவா்கள் சஞ்சீவி, பிரபா, மைக்கேல், பாரதிராஜா ஆகியோா் சிகிச்சை அளித்தனா். செவிலியா்கள் விஜயா, ஜெயந்தி, துணை செவிலியா் அலமேலு, வட்டார புள்ளியல் ஆய்வாளா் அன்பரசு உள்ளிட்டோா் சிகிச்சைக்குத் தேவையான முன்னேற்பாடு பணிகளை செய்திருந்தனா்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் லேப்ராஸ்கோபி மூலம் குடும்ப நல அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறும் என மருத்துவா் எழிலரசி தெரிவித்தாா்.