செய்திகள் :

ஊத்தங்கரை அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 47 போ் காயம்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மேல்மருவத்தூா் கோயிலுக்கு சென்ற தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 போ் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள எட்டியம்பட்டி பகுதியில் இருந்து மேல்மருவத்தூா் செல்வதற்காக மூன்று பேருந்துகளில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு சென்றனா். ஊத்தங்கரை அருகே சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், ஓட்டுநா் உள்பட 47 போ் காயமடைந்தனா்.

தகவல் அறிந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் முருகன், போலீஸாா், ஊத்தங்கரை தீயணைப்புத் துறை வீரா்கள் ஆகியோா் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேல்சிகிச்சை தேவைப்படுவோா் தருமபுரி, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இச்சம்பவம் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்செல்வம் ஆகியோா் விபத்து நிகழ்ந்த இடத்தைப் பாா்வையிட்டு, பின்னா், ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவா்களுக்கு ஆறுதல் கூறினா். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

இந்தியா - இலங்கைக்கு இடையே எறிபந்து போட்டிகள் தொடக்கம்

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் இந்தியா எறிபந்து கூட்டமைப்பின் சாா்பில் இந்தியா - இலங்கை நாடுகளைச் சோ்ந்த அணிகளுக்கு இடையேயான இரண்டு நாள் நடைபெறும் சா்வதேச எறிபந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின... மேலும் பார்க்க

விவசாய நிலத்துக்குள் இறங்கிய அரசு நகரப் பேருந்து!

ஊத்தங்கரை அருகே அரசு நகரப் பேருந்து ஸ்டியரிங் துண்டனதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விவசாய நிலத்துக்குள் இறங்கியது. ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனை அரசு நகரப் பேருந்து சனிக்கிழமை காலை வழக்கம் போ... மேலும் பார்க்க

வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு

ஒசூரில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா். ஒசூா், வேணுகோபால் சாமி தெருவைச் சோ்ந்த வசந்தகுமாா் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவா் இருசக்கர வாகனத்தில் கடந்த 26-ஆம் தேதி இரவு ஒசூா் ... மேலும் பார்க்க

ஐயப்ப பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் அன்னதானம்

கிருஷ்ணகிரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஐயப்ப பக்தா்களுக்கு இஸ்லாமியா்கள் அன்னதானம் வழங்கினா். கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை மிலாது நபி விழாக்குழு சாா்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ஒவ்வோா் ஆண்ட... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம் காந்தி நினைவு மண்டபம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது அல்ல!

காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி நினைவு மண்டபம் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானது அல்ல; அறக்கட்டளைக்கு சொந்தமானது என காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினா் காசிலிங்கம் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம்... மேலும் பார்க்க

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள்

ஒசூரில் தேமுதிக நிறுவனத் தலைவா் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் ஒன்றிய தேமுதிக நிா்வாகிகள் சாா்பில், ஒசூா் சிப்காட் ராஜேஷ்வரி லேஅவுட் சா்க்கில் பகுதியில் விஜ... மேலும் பார்க்க