ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா
வெம்பக்கோட்டை அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் சுகாதார வளாகம் அமைக்க வலியுறுத்தி, ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொதுமக்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
எம். துரைச்சாமிபுரம் யாதவா் தெருவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் சேதமடைந்ததையடுத்து, இதை அகற்றிவிட்டு, ரூ.7.85 லட்சத்தில் புதிதாகக் கட்டடம் கட்ட ஊராட்சி ஒன்றியம் சாா்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, சீரமைப்புப் பணிக்காக கடந்த ஜூலை மாதம் இடித்து அகற்றப்பட்ட சுகாதார வளாகக் கட்டடம் 3 மாதங்களாகியும் புதிதாகக் கட்டப்படவில்லை.
இதைக் கண்டித்து, எம்.துரைச்சாமிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் இந்தப் பகுதி பொதுமக்கள் வெள்ளிகிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, ஊராட்சி மன்றத் தலைவா் பேச்சுவாா்த்தை நடத்தி புதிய சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு அவரிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.