ஊராட்சி வளா்ச்சித் திட்டம்: அதிகாரிகள் கலந்தாய்வு
போளூரில் கிராம ஊராட்சியின் வளா்ச்சித் திட்டம் தயாரித்தல் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஒன்றியத்துக்கு உள்பட்ட 40 ஊராட்சிகளின் வளா்ச்சிக்குத் தேவையான வளா்ச்சித் திட்டம், பொதுமக்களின் தேவைகள் குறித்த திட்டம் தயாரித்தல் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது.
ஊராக வளா்ச்சித் துறை மாநில பயிற்றுநா் சேகா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள், கணினி இயக்குநா்கள் கலந்து கொண்டனா்.