செய்திகள் :

``எங்களை அவமானப்படுத்திவிட்டீர்கள்... முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

post image

சென்னை எழில் நகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் 5 வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டிடத்தில் அமைந்துள்ள மாண்டிசேரி மழலையர் வகுப்புகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது,``நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி-கள் எதைப் பேசவேண்டும் என நீண்ட விவாதங்களுக்குப்பிறகு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அதையே அவர்கள் பேசுவார்கள். அதானி - திமுக உறவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பேசிவிட்டார். அதற்குப் பிறகு அதில் பேச எதுவுமில்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" எனப் பேசினார்.

ஸ்டாலின்

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், ``இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ராமதாஸ். இப்போது அவருக்கு வயது 86. இந்தியாவின் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் மதிக்கக்கூடிய ஒரு தலைவர் ராமதாஸ். அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தேவையில்லை என முதல்வர் ஆணவத்துடன் பேசுவது அவரின் பதவிக்கு அழகுகிடையாது. அதானியை ரகசியமாக உங்கள் இல்லத்தில் ஏன் சந்தித்தீர்கள் என ராமதாஸ் கேட்டக் கேள்வியில் என்ன தவறு இருக்கிறது. அரசை கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது அவர்களின் கடமை. ஆனால், அப்படி பதில் சொல்லாமல் ராமதாஸை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திவிட்டீர்கள்.

இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ராமதாஸ் இல்லையென்றால் 2006-ல் உங்கள் தந்தை முதலமைச்சராகியிருக்க முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நாங்கள் கொடுத்த முழு ஆதரவால்தான் அந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடித்தது. உங்களையும் உங்கள் தந்தை துணை முதலமைச்சராக்கினார். நாங்கள் கொடுத்த வழக்கை திரும்பப் பெற்றதால்தான் கலைஞர் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய மணி மண்டபம் அங்கு அமைக்கப்பட்டது. இந்தியாவில் 6 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த ஒரு சமூக சீர்திருத்தவாதித் தலைவரைப் பார்த்து 'அவருக்கு வேலை இல்லை' எனக் கூறியது முதல்வரின் ஆணவத்தின் உச்சம். கலைஞரிடமிருந்து முதல்வர் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

Adani ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன?" - ராமதாஸ் கேள்வி

எங்களின் அறிக்கையை எங்களின் யோசனையாகதானே எடுத்திருக்க வேண்டும். அமெரிக்காவில் தமிழ்நாட்டின் மானம் போய்க்கொண்டிருக்கிறது. உங்கள் வீட்டில் அதானியை சந்தித்தற்கு அமைச்சர் ஏன் பதில் சொல்ல வேண்டும். மடியில் கணம் இல்லையென்றால் ஏன் இவ்வளவு பதற்றம். யாரும் லஞ்சம் வாங்கவில்லை என்றால், அதற்காக விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றுதானே அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிருக்கிறார். மது ஒழிப்பு கொள்கையை கொண்ட, மக்களுக்காக வாழ்வை அர்பணித்த ஒரு தலைவரை இப்படி அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உடனடியாக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், அல்லது மன்னிப்புக்கேட்க வேண்டும். எங்களின் தொண்டர்களின் உணர்வை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு குடிகார நாடாக, கஞ்சா, ஊழல் நாடாக மாறிவிட்டது. இதுதான் திராவிட மாடல். முதல்வர் அவர்களே பக்குவமாக இருங்கள். கவனமாக கையாளுங்கள். கோபப்படாமல், பதற்றப்படாமல் பதில் சொல்லுங்கள். எங்கள் தொண்டர்களெல்லாம் அதிர்ச்சியில், உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கிறாரக்ள். ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

``சினிமாவைத் தாண்டிய நெருக்கம்...'' - மண்புழு தாத்தா... விழாவில் நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி!

மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் எழுதிய, "மண்புழு தாத்தாவின் மண்நல புரட்சிப் பாதை" என்ற புத்தக வெளியீட்டு விழா, நேற்று (24/11/2024) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகி... மேலும் பார்க்க

ராமதாஸ் விவகாரம்: ``ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்" - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்...தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதானி - திமுக உறவு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியது தொடர்பாக கேட்கப்பட்டது. அப்போது முதல்வர் ஸ... மேலும் பார்க்க

தாமதமாகும் கலிபோர்னியா தேர்தல் முடிவுகள்; இந்திய தேர்தல் முறையை பாராட்டிய எலான் மஸ்க்..!

எலான் மஸ்க் கருத்துஉலகின் பெரும் பணக்காரரும், டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசின் செயல்திறன் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்க இருப்பவருமான எலான் மஸ்க், இந்தியாவின் தேர்தல் நடைமுறையை பாராட்டியுள... மேலும் பார்க்க

Kangana Ranaut: ``பெண்களை அவமரியாதை செய்பவர்கள்..." - உத்தவ் தாக்ரே தோல்வி குறித்து கங்கனா ரனாவத்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க, ஏக்நா... மேலும் பார்க்க

Udhaynithi Stalin: ``இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்!" - தொண்டர்களிடம் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை!

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சரும், விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் 27-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக தமிழ்நா... மேலும் பார்க்க

``கரூர் விஷன் - 2030; ரூ.50,000 கோடி இலக்கு!'' -அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர்கரூர் மாவட்டம் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட முக்கிய தொழில்கள் நிறைந்த மாவட்டமாகும். இந்நிலையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் க... மேலும் பார்க்க