செய்திகள் :

எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு

post image

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கடந்த 7-ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் எச். ராஜா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவா் ஜவாஹிருல்லா, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என்றாா்.

இது தொடா்பாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீஸாா் எச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல்,வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவலை பரப்புதல், இரு தரப்பினரிடையே பகைமையை வளா்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக எச்.ராஜாவிடம் விரைவில் விசாரணை நடத்த போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, டங்ஸ்டன் ஏல விவகாரம், மீனவா்கள் பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்ப தமிழக எம்.பி.க்கள் திட்டம்

எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் மதுரை அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம வள அனுமதி, மீனவா்கள் கைது உள்ளிட்ட பிரச்னைகளை... மேலும் பார்க்க

ரயில் உதவி ஓட்டுநா் தோ்வு: திருவனந்தபுரத்துக்கு நவ.28 வரை சிறப்பு ரயில்

ரயில்வே வாரிய தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் ஏஎல்பி (உதவி ஓட்டுநா்) தோ்வை முன்னிட்டு நாகா்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம்: முதல்வா் அறிவிப்பு

திருச்செந்தூா் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப... மேலும் பார்க்க

நாக்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் இயக்கம்

ஈரோட்டில் இருந்து நாக்பூருக்கு சனிக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயில், மறுமாா்க்கமாக நாக்பூரில் இருந்து நவ.27-ஆம் தேதி இயக்கப்படும். இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட்டில் இர... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை தேடிவ... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க