செய்திகள் :

எச்1பி விசா: அமெரிக்காவுக்கும் பாதிப்பா?

post image

அமெரிக்காவில் புதிதாக எச்1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்திய வெளியான அந்நாட்டு அரசின் அறிவிப்பால், இந்திய தொழில்நுட்பத் துறையினர் மட்டுமின்றி அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருக்கும் தொழிலாளர்களில் 71 சதவிகிதத்தினர் (2,83,397) இந்தியர்களே. அக்டோபர் 2024 - செப்டம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில், டிசிஎஸ் (TCS) நிறுவனம் மட்டும் 5,500-க்கும் மேற்பட்ட எச்1பி விசாக்களை வழங்கியது. அதனைத் தொடர்ந்து காக்னிசன்ட் - 3,700, இன்ஃபோசிஸ் - 2,004, எல்டிஐ மைன்ட் ட்ரீ - 1,807, எச்.சி.எல். டெக் - 1,728 விசாக்களையும் வழங்கியுள்ளன.

அமெரிக்காவுக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதியால், இந்தியாவுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கிறது.

மேலும், புதிய கட்டண அறிவிப்பால் அமெரிக்காவின் வருவாயிலும் பாதிப்பு ஏற்படலாம்.

அமெரிக்க வருவாயில் முக்கிய இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

டிசிஎஸ் - 48%

இன்ஃபோசிஸ் - 58%

எச். சி. எல் டெக் - 66%

விப்ரோ - 63%

டெக் மஹிந்திரா - 51%

இருப்பினும், ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்கு டிரம்ப் அரசின் புதிய கட்டண அறிவிப்பு பொருந்தாது.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!

சாலைப் பள்ளங்களுக்காக பெங்களூருவை விட்டுச் செல்வதா? பிரபல நிறுவன சிஇஓ

பெங்களூருவில் உள்ள சாலைப் பள்ளங்களால் ஊழியர்கள் பணிக்கு வருவதில் சிரமம் ஏற்படுவதால், அந்நகரில் இருந்து வெளியேறுவதாக பிரபல தளவாட தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்திருந்தது.ஊழியர்கள் சாலைப் பள்ளங்கள், போக்கு... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசத்தில் தடம்புரண்ட சரக்கு ரயிலின் 3 பெட்டிகள்!

மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது என்று அதிக... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று(செப். 21) மாலை 5 மணிக்கு உரையாற்றவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் தாயார் அவமதிப்பு! ஆர்ஜேடி மீது பாஜக குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (RJD) சார்பில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெ... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் தளப் பக்கம்!

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் 'எக்ஸ்' தளப் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்த பிறகு ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி கொடிகளின் படங்களை பதிவிட்டுள்ளனர் என்று அதிகாரி ... மேலும் பார்க்க

திருப்பதி உண்டியல் காணிக்கை: ஒரே நாளில் ரூ. 4.59 கோடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையில் 82,042 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்துக்கு 24 ... மேலும் பார்க்க