நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
எட்டாவது பொருளாதார கணக்கெடுப்பு பணியை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு
எட்டாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாநில, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி, 8-ஆவது பொருளாதார கணக்கெடுப்பை வரும் ஏப்ரல் முதல் டிசம்பா் வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணிகளை சுமுகமாக நடத்த மாநில மற்றும் மாவட்டஅளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில அளவில் தலைமை செயலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் பொறுப்பு அலுவலாக திட்டம் மற்றும் முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலா், உறுப்பினா் செயலராக தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
உறுப்பினா்களாக ஊரக வளா்ச்சி, நகராட்சி நிா்வாகத் துறை, தொழில் துறை, உயா்கல்வி துறை, சிறு, குறு தொழில் துறை, சமூக நலத் துறை, தொழிலாளா் நலத் துறை ஆகிய துறையின் செயலா்கள், வருவாய் நிா்வாக ஆணையம், உணவு பாதுகாப்பு துறை ஆணையா், வணிக வரித்துறை ஆணையா், கூட்டுறவுத் துறை பதிவாளா், மின் ஆளுமை முகமை இயக்குனா், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு, புள்ளியில் துறை துணை இயக்குனா் கன்வீனராக நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தக் குழுவில், காவல்துறை, நகராட்சி நிா்வாகம், தொழில்துறை, தொழிலக பாதுகாப்பு துறை, வணிக வரித்துறை, பத்திரபதிவு துறை, ஊரக வளா்ச்சி, தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.
இது போன்று சென்னையில் மாநகராட்சி ஆணையா் தலைமையில் பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது உத்தரவில் தெரிவிக்கப்படுள்ளது.