தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
``எந்த முன் நிபந்தைனையுமின்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்..." - இறங்கி வரும் ரஷ்யா?
நீண்டுவரும் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வரவேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ``உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது" என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருக்கிறார். ரஷ்ய அதிபர்கள் பங்கேற்கும் வருடாந்திர குடிமக்களுடனான கேள்வி பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், புதின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, ``அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்புடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் போரில் சமரசம் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். பல ஆண்டுகளாக ட்ரம்புடன் பேசவில்லை. ஆனால், இந்தப் போர் குறித்து விவாதிக்க அவரைச் சந்திக்க தயாராக இருக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு எந்த முன்நிபந்தனைகளும் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஒப்பந்தமும் முறையான உக்ரேனிய அதிகாரிகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உட்பட யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. 2022 உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து நாடு வலுவாக வளர்ந்துள்ளது" என்றார்.