செய்திகள் :

JPC: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - பிரியங்கா காந்தி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வேலை என்ன?

post image

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும், அதற்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 196 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேவும் அதற்கு எதிரான குரல்களும், போராட்டங்களும் வெடித்து வருகின்றன.

அதனால், இந்த திட்டம் குறித்து முடிவெடுக்கக் கூட்டு நாடாளுமன்றக் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்தக் குழுவில் 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தம் 39 பேர் இடம்பெற உள்ளனர்.

ஒரே நாடு...ஒரே நேரத்தில் தேர்தல்

இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 18) அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இரண்டு நாளாக இரு அவையிலும் அமளி ஏற்பட்டது. அதனால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இன்று (டிசம்பர் 20) மக்களவை கூட்டத்தொடர் அமளியில் தொடங்கியிருந்தாலும், அவையை ஒத்தி வைப்பதற்கு முன்பு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த குழுவில் பிரியங்கா காந்தியும் இடம்பெற்றிருக்கிறார். இந்தக் குழுவின் செயல்பாடு என்ன என்பதைப் பார்ப்போம்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு

பொதுவாகவே, நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது குறிப்பிட்ட விஷயங்களில் அல்லது மசோதாவில் எதாவது எதிர்ப்போ, சந்தேகமோ எழுந்தால்தான் அமைக்கப்படும். இந்த குழுவில் இரண்டு அவை உறுப்பினர்களும் இடம்பெற்றிருப்பார்கள்.

இந்தக் குழு அரசின் எந்தத் தூண்டுதல்களும் இல்லாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு அறிக்கையைத் தயார் செய்யும்.

இந்தக் குழு அறிக்கையைத் தயார் செய்து சமர்ப்பித்த பின்னர், இந்தக் குழு கலைக்கப்படும். ஆனால், இந்தக் குழு தரும் அறிக்கை தான் இறுதியானது என்பதில்லை. அரசு வேண்டுமென்றால் கூடுதல் விசாரணைக்குக் கூட செல்லலாம்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

அமித் ஷா சர்ச்சை பேச்சு: திசை திருப்ப நாடகம் நடத்துகிறதா BJP? Ambedkar | Imperfect Show

* மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு! * அடிபட்ட எம்.பி. ஐசியூவில்? - மோடி எங்கே? * விசாரிக்கும் நமது டெல்லி நிருபர். * Mumbai: காங்கிரஸ் அலுவலகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர... மேலும் பார்க்க

`பொய் நெல்லைக் குத்திப் பொங்கல் வைக்க முடியாது!' - எடப்பாடி பழனிசாமியைச் சாடிய ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் ஒரு பகுதியாக ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கள்ளநோட்டுகள் புழக்கம்... திணறுகிறதா மோடி அரசு?!

நவம்பர் 8, 2016-ம் ஆண்டு இரவு 8 மணிக்குப் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உடனடியாகச் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி, "பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டப்படாத கற... மேலும் பார்க்க

Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அதை..." - பா.ரஞ்சித்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் ப... மேலும் பார்க்க

`நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்?’ - முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில்

கோவை திமுக முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-வாக இருந்தவர் மோகன். இவர் கட்சியிலும் மாவட்ட அளவில் தொடங்கி மாநில அளவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிரு... மேலும் பார்க்க