செய்திகள் :

அதிகரிக்கும் கள்ளநோட்டுகள் புழக்கம்... திணறுகிறதா மோடி அரசு?!

post image

நவம்பர் 8, 2016-ம் ஆண்டு இரவு 8 மணிக்குப் புழக்கத்திலிருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை உடனடியாகச் செல்லாது என அறிவித்த பிரதமர் மோடி, "பெரும் செல்வந்தர்கள் பதுக்கி வைத்திருக்கும் கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணத்தை இனி மாற்ற இயலாது. இதன் காரணமாகத் தீவிரவாதத்துக்குத் துணை போகும் நடவடிக்கைகள் முடக்கப்படும். கள்ளப்பணம் இருக்காது. நாட்டில் ஊழல் குறையும்" எனப் பேசியிருந்தார்.

ஆனால் 8 ஆண்டுகள் கடந்தபோதும் நாட்டில் தற்போது வரையில் கறுப்புப் பணத்தின் புழக்கம் அதிகமாகவே இருப்பதும், அதைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதும் சமீபத்தில் வெளியாகியிருக்கும் புள்ளிவிவரங்களின் மூலம் அம்பலமாகியிருக்கிறது!

கள்ளநோட்டு

நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர் செல்வகணபதி, "2018-19 முதல் 2023-24 ஆண்டுகளுக்கு இடையில் புதிய ரூ.500, ரூ.2,000 கள்ளநோட்டுக்கள் கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்துள்ளது. எனவே அதன் விவரங்கள் என்ன?" எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதிலில், "புதிய ரூ.500 கள்ள நோட்டுக்கள் 2018-19, 2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24-ம் ஆண்டுகளில் முறையே 21,865, 30,054, 39,453, 79,669, 91,110, 85,711 (mpcs -million pieces) கைப்பற்றப்பட்டுள்ளது. இதேபோல் ரூ.2,000 கள்ள நோட்டுக்கள் முறையே 21,847, 17,020, 8,798, 13,604, 9,806, 26,035 ((mpcs -million pieces)) கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

ரூ.9,500 கோடி கள்ளப்பணம் புழக்கத்தில் இருக்கிறது!  

இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், "கள்ளப்பணம், கருப்புப் பணம், ஊழல் ஒழிக்கப்படும், தீவிரவாதிகளுக்குக் கிடைக்கும் பணம் தடுக்கப்படும் என சொல்லித்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தார்கள். இதில் தீவிரவாதிகளிடம் எவ்வளவு பணம் அப்போது இருந்தது, இப்போது எவ்வளவு இருக்கிறது என்கிற விவரம் அரசிடம் இல்லை. கருப்புப் பணம் சொத்தாகவும், பொருளாகவும், நகையாகவும்தான் இருக்கும். எனவே பண மதிப்பு நீக்கத்தால் எந்த பலமும் இல்லை எனப் பொருளாதார நிபுணர்கள் பலர் சொல்லியும் அரசு கேட்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தின்போது நாட்டில் ரூ.18 லட்சம் கோடி புழக்கத்திலிருந்தது. அதில் ரூ.400 கோடிதான் கள்ளப்பணம். ஆனால் இன்று ரூ.9,500 கோடி கள்ளப்பணம் இருக்கிறது.

சி.பி.கிருஷ்ணன்

தற்போது மொத்தமாக ரூ.35 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்போம் என்றார்கள். ஆனாலும் கிராமங்கள், டிஜிட்டல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள், விருப்பம் இல்லாதவர்கள் என 65% மக்கள் பணத்தைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களைக் குறிவைத்துத்தான் கள்ளநோட்டு கும்பல் செயல்படுகிறது. இதனால் அந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கள்ள நோட்டுக்களை எப்படிக் கண்டறிய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதேசமயத்தில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் போது புதிய தொழில்நுட்பங்களை அவ்வப்போது புகுத்த வேண்டும். அப்போதுதான் எளிதாக போலியான ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க முடியாது" என்றார்.

பொம்மையை நிதியமைச்சராக வைத்திருக்கிறார்கள்! 

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன் பேசுகையில், "பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ரூ.15.44 லட்சம் கோடி நோட்டுக்களில் ரூ.15.31 லட்சம் கோடி நோட்டுகள் அதாவது, 99.9% வங்கிகளுக்குத் திரும்ப வந்துவிட்டது. பிறகு எதற்கு அந்த நடவடிக்கையை எடுத்தார்கள்?. போதாக்குறைக்கு ரூ.2,000 நோட்டுகளை அச்சடிக்க மட்டுமே ரூ.12,677 கோடி செலவு செய்து மக்களின் வரிப்பணத்தைச் சூறையாடினார்கள். இது கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில்லை. மாறாக அதை வெள்ளையாக மாற்ற எடுத்த நடவடிக்கைதான். இதற்கு அமித்ஷா இயக்குநராக இருந்த அகமதாபாத் கூட்டுறவு வங்கி விவகாரத்தையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஜி.கே.முரளிதரன்

அங்குப் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட முதல் 5 நாட்களில் மட்டுமே ரூ.745 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் டெபாசிட் ஆனதாக செய்திகள் வெளியாகின. இப்படிப் பல இடங்களில் நடந்துள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவது தடுக்கப்படும் என்றார்கள். ஆனால் தற்போது நாடாளுமன்றத்தில் கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டுள்ளது என வெட்கம் இல்லாமல் சொல்கிறார்கள். ஒன்றுமே தெரியாமல் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை நிதியமைச்சராக வைத்திருக்கிறார்கள். ஸ்டாம்பின் பின்பக்கம் எழுதும் அளவுக்குக் கூட பொருளாதாரம் பற்றி பிரதமர், நிதியமைச்சருக்கு அறிவு இல்லை என பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியே சொல்கிறார். அந்த அளவுக்குத்தான் அவர்களின் நிலை இருக்கிறது" எனக் கொதித்தார்.

'நாங்கள் கள்ளநோட்டு கும்பலுக்கு கடன் உதவி செய்யவில்லை!'  

இறுதியாக பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீநிவாசனிடம் விளக்கம் கேட்டோம், "பொருளாதாரம், நிதி என்றால் என்னவென்றே தெரியாத நிலையில்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. கறுப்புப் பணம், கள்ளப் பணம் இரண்டும் வேறு. வருமானவரியை முறையாகச் செலுத்தாமல் வைத்திருந்தால் அது கறுப்புப் பணம். அதை நாங்கள் கட்டுப்படுத்திவிட்டோம். நாடாளுமன்றத்தில் கள்ளநோட்டுக்கள் குறித்துத்தான் பேசப்பட்டது.

இராம ஸ்ரீநிவாசன்

அதை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அச்சடிக்கலாம். இதற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்துவருகிறோம். எனவேதான் அதிக அளவு கள்ளநோட்டுக்கள் பிடிபட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஏ.டி.எம் இயந்திரத்திலேயே கள்ளநோட்டுக்கள் வந்தன. அப்போதெல்லாம் அவர்கள் நடவடிக்கை எடுக்காமலிருந்தார்கள். எனவே எல்லா காலத்திலும் சமூக விரோதிகள் இருப்பார்கள். நாங்கள் ஒன்றும் கள்ளநோட்டுக்களை அச்சடிப்பவர்களுக்குக் கடன் உதவி செய்தி ஊக்குவிக்கவில்லை. விரைவில் கள்ளநோட்டுக்கள் முழுமையாக ஒழிக்கப்படும்" என்றார்.

ஒன் பை டூ

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்புச் செயலாளர், தி.மு.க.“உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது செய்வதைத் தவிர்த்து, மற்ற எல்லா வேலைகளையும் பா.ஜ.க தொடர்ந்து செய்துகொண்டி... மேலும் பார்க்க

அமித் ஷா சர்ச்சை பேச்சு: திசை திருப்ப நாடகம் நடத்துகிறதா BJP? Ambedkar | Imperfect Show

* மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு! * அடிபட்ட எம்.பி. ஐசியூவில்? - மோடி எங்கே? * விசாரிக்கும் நமது டெல்லி நிருபர். * Mumbai: காங்கிரஸ் அலுவலகத்தைச் சூறையாடிய பாஜக தொண்டர... மேலும் பார்க்க

`பொய் நெல்லைக் குத்திப் பொங்கல் வைக்க முடியாது!' - எடப்பாடி பழனிசாமியைச் சாடிய ஸ்டாலின்

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் ஒரு பகுதியாக ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

JPC: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - பிரியங்கா காந்தி இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் வேலை என்ன?

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதும், அதற்குப் பெரியளவில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 196 உறுப்பினர்களும் வாக... மேலும் பார்க்க

Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அதை..." - பா.ரஞ்சித்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் ப... மேலும் பார்க்க