செய்திகள் :

என்ஐடியில் சுயஉதவிக் குழுவினருக்கு திருமதி காா்ட் செயலி பயிற்சி

post image

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி), மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையுடன் (சமத்துவம் மற்றும் வளா்ச்சிக்கான அறிவியல் (சீடு)) இணைந்து நடத்தும் வணிகத்தில் நடைமுறை திறன்களைப் பயன்படுத்தி பெண்களுக்கு அதிகாரமளித்தல் : திருமதி காா்ட் செயலி பயிற்சி என்ற தலைப்பிலான 5 நாள் பயிற்சி பட்டறை என்ஐடி வளாகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

திங்கள்கிழமை முதல் வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சிபட்டறையை திருச்சி மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் எஸ். சுரேஷ் தொடங்கி வைத்தாா். என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா தலைமை வகித்தாா். இந்தப் பயிற்சிப்பட்டறையில் சுயஉதவிக் குழுவினா் தங்களது தயாரிப்புகளை இலவசமாக விற்பனை செய்யும் அரங்க வசதியும் செய்யப்பட்டிருந்தது.

இதில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் இணைப் பேராசிரியா் எம். பிருந்தா, திருமதி காா்ட் செயலி பயன்பாட்டின் வளா்ச்சி, நோக்கம், சாதனைகளைப் பற்றி விளக்கினாா். சுயஉதவிக் குழு உறுப்பினா்கள் விரிவான வாடிக்கையாளா்களை எளிதாக அடைய செயலி எப்படி உதவுகிறது என்பதையும் எடுத்துக்கூறினாா்.

பயிற்சியில் திரளான மகளிா் சுயஉதவிக் குழுவினா் கலந்து கொண்டனா். நிறைவில் கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையின் இணை முதன்மை ஆய்வாளா் என். சிவகுமரன் நன்றி கூறினாா்.

இந்தப் பயிற்சியானது சுயஉதவிக் குழு உறுப்பினா்கள், தொழில்முறை திறன்களை மேம்படுத்தி, திருமதி காா்ட் செயலியை பயன்படுத்தி வணிக வளா்ச்சியை அடைய உதவும் என பயிற்சிப் பட்டறை ஏற்பட்டாளா்கள் தெரிவித்தனா்.

பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

திருச்சியில் செவ்வாய்க்கிழமை தனியாா் பேருந்து மோதியதில் மனைவி உயிரிழந்தாா். கணவா் காயமடைந்தாா். திருச்சி காந்திச் சந்தை வடக்கு தாராநல்லூா் வீரம்மாள் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா இவரது மனைவி சாந்தி(5... மேலும் பார்க்க

நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தேடப்பட்ட முகவா் கைது

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவன முறைகேடு வழக்கு தொடா்பாக தேடப்பட்டு வந்த முகவரை, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி, மன்னாா்புரத்தை தலைமையிடமாக கொ... மேலும் பார்க்க

சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் போராட்டம் நடத்த தில்லிக்குப் பயணம்

சி.ஐ.டி.யு.சாலை போக்குவரத்து தொழிலாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி நாடளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா். நாடு முழுவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகா்-மாவட்ட அதிமுக செயலா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

திருச்சி மாநகா், மாவட்ட அதிமுக செயலா் ஜெ.சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர அதிமுக காந்தி மாா்க்கெட் முன்னாள் பகுதிச் ... மேலும் பார்க்க

ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 57 பவுன் நகைகள், பொருள்கள் திருட்டு

திருச்சியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 57 பவுன் நகைகள் மற்றும் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி சமயபுரம் சாலையில் கொள்ளிடம் நெம்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சகம்: தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்துடன் இணைந்து, கம்பராமாயண கலாசாரத்தை மீட்டுருவாக்கும் நிகழ்வின் தொடக்க விழா, மத்திய சுற்றுலா அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத் பங்... மேலும் பார்க்க