செய்திகள் :

எலான் மஸ்குடன் பிரதமா் மோடி பேச்சு

post image

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனா் எலான் மஸ்குடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து இருத்தலைவர்களும் மீண்டும் ஆலோசித்தனர்.

அப்போது, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்புகளில் இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகளை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தத் துறைகளை ஒத்துழைப்பின் மூலம் முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டிசி-யில் நடந்த எங்கள் சந்திப்பின் போது நாங்கள் பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து எலான் மஸ்கும் நானும் கலந்துரையாடினோம்‌.

டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!

தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது அரசில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசுத் துறைகள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவராக எலான் மஸ்கை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் வழக்கு: குட் பேட் அக்லி பட நடிகருக்கு ஜாமீன்

போதைப்பொருள் வழக்கில் கைதான குட் பேட் அக்லி பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்துள்ளது.கொச்சியில் உள்ள ஹோட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தியபோ... மேலும் பார்க்க

ஹிந்தி கட்டாயமாக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம்! - உத்தவ் தாக்கரே

ஹிந்தியை கட்டாயமாக்க மகாராஷ்டிரத்திலும் எதிர்ப்பு வலுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழ... மேலும் பார்க்க

ஆர்பிஐ தங்க கையிருப்பின் மதிப்பு சுமார் ரூ.12,000 கோடி அதிகரிப்பு

நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு மதிப்பு ஏப்ரல் 11ஆம் தேதியுடன் முடிந்த ஒரு வாரத்தில் ரூ.12,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது. பொருளாதார நிலையற்றத் தன்மை, உலக நாடுகளிடைய ஏற்பட்டிருக்க... மேலும் பார்க்க

தில்லி கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாஃபாத்தில் குடியிருப்புக் கட்டடம் ஒன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்து விபத்த... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு: மருத்துவர்கள் கோரிக்கை ஏற்கப்படுமா?

ஜூன் 15-ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு காலை 9 - 12.30 மணிவரை, அதனைத்தொடர்ந்து அதே நாளில் மாலை 3.30 - 7 மணிவரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், இரு தொகுதிகளாக நீட் தேர்வு நடத்த வேண்... மேலும் பார்க்க

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த நபர் கைது

நொய்டாவில் மதுபோதையில் மனைவியின் விரலைக் கடித்து துண்டித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள செக்டார் 12-ஐ சேர்ந்தவர் அனூப் மன்சந்தா. இவர் மதுபோதையில் தனது மனைவியி... மேலும் பார்க்க