செய்திகள் :

"எல்லா இயக்குநருக்கும் என்னுடைய ஒரு கோரிக்கை..!" - சிம்ரன் | Ananda Vikatan Cinema Awards 2024

post image

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது.

சிம்ரன்

2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் சிறந்த வில்லன் நடிகை விருது சிம்ரன் பெற்றார். இந்த விருதினை இயக்குநர் எழில் வழங்கினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சிம்ரன், "இந்த விருது எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த டிசைன் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனந்த விகடன் குடும்பத்துக்கு ரொம்ப நன்றி. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் பிரசாந்த் கூட இந்த படத்துல நடிச்சேன்.

ரீமேக் படம் ரொம்ப சேலஞ்சிங்கான விஷயம். இதனை அங்கீகரித்ததற்கு விகடனுக்கு நன்றி. தற்கால எல்லா டைரக்டருக்கும் என்னுடைய ஒரே கோரிக்கை, ப்ளீஸ் ரியல் உமன் சென்ட்ரிங் ரோல்ஸ் எழுதுங்க. நான் வெயிட் பண்றேன்" என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி,"நான் எத்தனையோ ... மேலும் பார்க்க

'நிறையப் பிரச்னைகள்... அம்மா அழுதுட்டாங்க; அப்பா இல்லாதது...'- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்

அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘படைத்தலைவன்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்ப... மேலும் பார்க்க

Parthiban: 'ஆவலுடன் காத்திருக்கிறேன்!'- விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன் விரைவில் கமர்ஷியல் திரில்லர் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன். இதுதொடர்பாகப் பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதி... மேலும் பார்க்க

Lokesh Kanagaraj: "மிடில் கிளாஸ் வாழ்க்கை கனக்ட் ஆனது" - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குநர்!

காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்திய... மேலும் பார்க்க

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க