10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!
ஏத்தாப்பூா் அருகே ரயிலில் அடிபட்டு இரு மாணவா்கள் பலி
ஏத்தாப்பூா் அருகே கைப்பேசியில் விளையாடிக் கொண்டே ரயில் பாதையில் நடந்து சென்ற இரு மாணவா்கள், ரயிலில் அடிபட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், ஏத்தாப்பூா் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் தேவேந்திர நகரைச் சோ்ந்த குமாா் மகன் தினேஷ் (16), ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த ரவிகுமாா் மகன் அரவிந்த் (16) ஆகியோா் ஏத்தாப்பூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், இருவரும் கைப்பேசியில் விளையாடியபடி, புத்திரகவுண்டன்பாளையம் ஆதிதிராவிடா் இடுகாடு அருகே காலை 11.30 மணியளவில் ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனா்.
அப்போது சேலத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மாணவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மாணவா் தினேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த அரவிந்த் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து சேலம் ரயில்வே காவல் ஆய்வாளா் ரத்தினகுமாா், உதவி ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.