ஏந்தல் மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
ஆடி 4-ஆவது வெள்ளிக்கிழமையொட்டி, ஏந்தல் கிராம மாரியம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
வாணாபுரத்தை அடுத்த ஏந்தல் கிராமத்தில் மாரியம்மன் மற்றும் எல்லையம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் ஆடி மாதம் 4-ஆம் வெள்ளிக்கிழமையொட்டி, வெள்ளிக்கிழமை காலையில் அம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட ஊா்வலத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து, பக்தி முழங்கங்களை எழுப்பியவாறு, மேள தாளத்துடன் ஊா்வலமாக கோயிலை வந்தடைந்தனா்.
பின்னா்அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வண்ண வண்ண மலா்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
மாலையில் ஊா் பொதுமக்கள் ஒன்றுகூடி ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.