Ladakh violence: போராட்டம் வன்முறையாக வெடித்ததற்கு யார் காரணம்; மத்திய அரசின் அற...
ஐரோப்பாவில் அல்வரெஸுக்கு முதல் ஹாட்ரிக்: அத்லெடிகோ த்ரில் வெற்றி!
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூலியன் அல்வரெஸ் (25 வயது) அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார்.
ஸ்பானிஷ் லீக்கான லா லீகா தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.
அத்லெடிகோ மாட்ரிட் தன் சொந்த மண்ணில் ராயோ வல்லேகானோ அணியுடன் இந்திய நேரப்படி இன்று (செப்.25) காலை மோதியது.
இந்தப் போட்டியில் 15-ஆவது நிமிஷத்தில் அல்வரெஸ் கோல் அடித்தார். முதல் பாதியின் கடைசியில் எதிரணி சார்பில் சமன்செய்யப்பட்டது.
இரண்டாம் பாதியில் எதிரணி 77-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-1 என முன்னேற மீண்டும் அல்வாரெஸ் 80-ஆவது நிமிஷத்தில் 2-2 என சமன் செய்தார்.
அத்லெடிகோ மாட்ரிட் த்ரில் வெற்றி
பின்னர், 88-ஆவது நிமிஷத்தில் பாக்ஸுக்கு வெளியே இருந்து அல்வரெஸ் அற்புதமான கோல் அடித்து அசத்தினார்.
ஸ்டாபேஜ் நேரத்தில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. இறுதியில் 3- 2 என அத்லெடிகோ மாட்ரிட் வென்றது.
இந்தப் போட்டியில் ஜூலியன் அல்வரெஸ் ஹாட்ரிக் கோல் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியில் 9 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
2022-க்குப் பிறகு முதல் ஹாட்ரிக்
அல்வாரெஸ் இல்லாத இந்த அணி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் லிவர்பூல் அணியிடம் 2-3 எனத் தோல்வியுற்றது.
ஐரோப்பாவில் சேர்ந்ததில் இருந்து அதாவது மான்செஸ்டர் சிட்டியில் 2022-இல் இணைந்ததுக்குப் பிறகு முதல்முறையாக ஜூலியன் அல்வரெஸ் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
அடுத்த லாலீகா போட்டியில் ரியல் மாட்ரிட் உடன் அத்லெடிகோ மாட்ரிட் செப்.27ஆம் தேதி மோதுகிறது.
இந்தப் போட்டியில் வென்றால், அத்லெடிகோ மாட்ரிட் லா லீகா தரவரிசையில் டாப் 5-க்குள் நுழைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.