செய்திகள் :

`ஒடுக்குமுறைக்கு எதிரான குரல் அது...' - பெண்கள் உரிமைக்காக போராடும் ஆப்கன் சிறுமிக்கு அமைதிப் பரிசு!

post image

ஆப்கானிஸ்தானின் காபூலில் பெண் குழந்தைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வாதிட்ட 17 வயது சிறுமி நிலா இப்ராஹிமிக்கு, அவரின் சிறப்புப் பணியை பாராட்டி மதிப்புமிக்க சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசு செவ்வாய் அன்று வழங்கப்பட்டது.

மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கு பங்களிப்பு செய்த இளைஞர்களை அங்கீகரிக்க `கிட்ஸ் ரைட்ஸ் அறக்கட்டளை'யால் சர்வதேச குழந்தைகள் அமைதி பரிசானது வழங்கப்படுகிறது. முன்பு, இப்பரிசு பெண் கல்விக்கு பிரசாரித்த மலாலா யூசுப்சாய், சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு, தாலிபன்கள் ஆட்சியை பிடித்தனர். ஆட்சிக்கு வந்த தாலிபன் நிர்வாகம் பல்வேறு கட்டளைகள் மற்றும் அடக்குமுறை விதிகள் விதித்து பெண்களை ஒடுக்கி மௌனமாக்கினர்.

தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021 இல், காபூல் கல்வி இயக்குநரகம் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பொது இடங்களில் பாடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டது. நிலா இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியாக இருக்க மறுத்துவிட்டார்.

#IAmMySong என்ற இயக்கத்தை உருவாக்கி எதிர்ப்புப் பாடலை பதிவு செய்தார். அவர் பாடிய பாடல் வைரலானது. தனது எதிர்ப்புப் பாடலை பதிவு செய்ய, அவரது சகோதரர் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார். இந்த #IAmMySong பிரசாரம் வெற்றி பெற்ற சில வாரங்களில் இந்த தடை உத்தரவு நீக்கப்பட்டது.

#IAmMySong பிரசாரத்துக்குப் பிறகு, "என்னால் வாழ முடியும் என முதன்முறை நினைத்தேன். நான் விரும்பியவாறு வாழ வேண்டும் என்று நினைத்தால், நான் பேச முடியும், நான் பேசுவதையும் ஏற்றுக்கொள்ளவார்கள்" என, தான் உணர்ந்ததாக நிலா ஒரு வீடியோ அறிக்கையில் கூறினார்.

பின்னர், நிலா மற்றும் அவர் குடும்பத்தினர் 30 பேர்ட்ஸ் அறக்கட்டளையின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றனர். பின்னர், பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்குச் சென்ற நிலா ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்காக அயராது குரல் கொடுத்து வாதிட்டு வருகிறார். அவரின் அறப்பணியை பாராட்டி சர்வதேச குழந்தைகள் பரிசு வழங்கி சிறப்பித்தது கிட்ஸ் ரைட்ஸ் அறக்கட்டளை.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் 20 ஆண்டுக்காலமாக காபூலில் ஆட்சி செய்து விலகிய பிறகு, தாலிபன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர். தாலிபன்கள் நாட்டை கைப்பற்றிய போது இப்ராஹிமிக்கு வயது 15.

30 பேர்ட்ஸ் அறக்கட்டளையின் உதவியோடு கனடாவுக்கு சென்ற இப்ராஹிமி பெண் குழந்தைகளின் உரிமைகளை முன்னிறுத்தி வாதிட்டு வந்தார். "ஹெர் ஸ்டோரி" என்ற இயக்கத்தினை உருவாக்கி, ஆப்கானிஸ்தானில் இருக்கும் பாதிக்கப்படும் பெண்களின் குரல்களை பார்வைக்கு கொண்டு வந்தார். ஆப்கானிஸ்தானிய பெண்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள இந்த இயக்கத்தின் வாயிலாக ஊக்குவித்தார்.

"ஒவ்வொரு நாளும் நான் ஆப்கானிஸ்தானில் பின்தங்கிய, எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருக்கும் பெண்களை நினைத்துப் பார்க்கிறேன். கனடாவில் இருக்கும் நான் என் வாழ்க்கை குறித்து முடிவெடுக்கிறேன், நான் விரும்பும் நபரைத் தழுவுகிறேன், ஆனால் அவர்களின் வாழ்வுநிலை என்ன?" என கடந்த ஆண்டு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான ஜெனிவா உச்சி மாநாட்டில் இப்ராஹிமி பேசியிருந்தார்.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான பள்ளிகளை மூடினார்கள். பெண்கள் படிக்க, வேலை செய்ய அனுமதியில்லை. மேலும் ஓர் ஆண் உறவினருடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். அவர்களால் பொது இடத்தில் பேச முடியாது மற்றும் முறையற்ற குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க பெண்கள் தலை முதல் கால் வரை மறைத்துக் கொள்ள வேண்டும். பூங்காக்கள், ஜிம்கள் மற்றும் பிற பொது வசதிகளைப் பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி இல்லை. மேலும் அனுமதியின்றி பயணம் செய்யவும் முடியாது.

இத்தகைய ஒடுக்குமுறைகளைக் கண்ட இப்ராஹிமி பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். “உலகின் ஒரு பகுதியில் பெண்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டால், உலகம் முழுவதும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படும்." எனவும் கூறினார். தன் சொந்த நாட்டிலேயே பேச உரிமை மறுக்கப்பட்ட நிலாவை அங்கீகரித்து, சர்வதேச குழந்தைகள் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது பெருமைக்குரியதாகும்!

Rain Alert: `நவம்பர் 25, 26 தேதிகளில் கனமழை' - விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அன்பில் மகேஸ்!

வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை, அடை மழை, கன மழை என பெய்து வருகிறது.கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் முன்... மேலும் பார்க்க

இயல்பு நிலைக்குத் திரும்பிய திருச்செந்தூர் கோயில் யானை; முகாமிற்கு அனுப்ப திட்டமா.. என்ன நடக்கிறது?

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை கடந்த 18-ம் தேதி உதவி பாகர் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசபாலன் ஆகியோரை துதிக்கையால் தாக்கி, காலாலும் உதைத்தது. யானை குடிலில... மேலும் பார்க்க

1000 நாள்களை எட்டிய போர்... உக்ரேனுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையிலெடுக்கப்போகிறதா ரஷ்யா?!

ஓயாத போர் மேகம்!1000 நாள்கள்...ஆயிரம் நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷப் போர் இன்னும் நின்றபாடில்லை. போர் நிறுத்தும் ஏற்படுமா என உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், உக... மேலும் பார்க்க

திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி... போராட்டத்தில் சீமான்!

திருவேற்காடு மாநகராட்சி பகுதியில் கோலடி ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்திருக்கிறது, வருவாய்த்துறை. இதையடுத்து நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில... மேலும் பார்க்க

கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரேஷன் பொருள்கள்; அரசுக்கு ரூ.69,000 கோடி இழப்பு - ICRIER அறிக்கை!

இந்தியாவின் பொது விநியோக அமைப்பு (Public Distribution System) மூலம் ஆண்டுக்கு 814 மில்லியன் மக்களுக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக 20 மில்லியன் டன் அரிசி, கோதுமை ஏற்றுமத... மேலும் பார்க்க

``திராவிடக் கட்சிகள் செய்த நல்ல காரியங்களை புறக்கணித்துவிட முடியாது” - சொல்கிறார் பா.ம.க கே.பாலு

``2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் கூட்டணி நிலைப்பாடென்ன.. `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்திருக்கிறாரே?”`பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மருத்துவர் ராமதாஸ்... மேலும் பார்க்க