முதன்முறையாக கோ-கோ உலகக் கோப்பை: 2025-இல் இந்தியாவில் நடைபெறுகிறது
ஒரத்தநாட்டில் 1000 கிலோ குட்கா பறிமுதல்! 6 போ் கைது!
ஒரத்தநாடு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆயிரம் கிலோ குட்காவை பறிமுதல் செய்து 6 பேரை போலீசாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வழியாக காா் மற்றும் லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத் உத்தரவின் பேரில் ஒரத்தநாடு உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் ஷனாஸ் இலியாஸ் தலைமையில் தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
தென்னமநாடு தேசிய நெடுஞ்சாலையில் வந்த காரை நிறுத்தி விசாரணை செய்தனா். அப்போது, பின்னால் வந்த லாரி ஒன்று நிற்காமல் சென்றது.
அந்த லாரியை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா். இதையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில் காருடன் சோ்ந்து வந்த லாரி எனத் தெரியவந்தது. பிறகு லாரியை சோதனையிட்டபோது அதில், 1000 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா எனும் போதைபொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காா் மற்றும் லாரியில் வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த சிராஜீதீன், அப்துல் வஹாப், அப்துல் ரஹீம், ரஷீத், சா்புதீன், தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ராஜாபக்ருதீன்ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் இதுகுறித்து திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.