ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்! முதலிடத்தில் கில்!
ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னேற்றம் பெற்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று(பிப்.26) வெளியிடப்பட்டுள்ளது. 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க:வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி ஒரு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 46 ரன்கள் விளாசிய ஷுப்மன் கில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடங்கள்
ஷுப்மன் கில் -817 புள்ளிகள்
பாபர் அசாம் - 770 புள்ளிகள்
ரோஹித் சர்மா -757 புள்ளிகள்
ஹென்ரிச் கிளாசன் -749 புள்ளிகள்
விராட் கோலி - 743 புள்ளிகள்
டேரில் மிட்செல் -717 புள்ளிகள்
ஹாரி டெக்டர் -713 புள்ளிகள்
சரித் அசலங்கா -694 புள்ளிகள்
ஸ்ரேயாஸ் ஐயர்-679 புள்ளிகள்
ஷாய் கோப் - 672 புள்ளிகள்
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா