ஒருநாள் தொடா்: பாகிஸ்தான் வெற்றி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், ‘டக்வொா்த் லீவிஸ்’ (டிஎல்எஸ்) முறையில் 36 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்ட இந்த கடைசி ஆட்டத்தில், இன்னிங்ஸுக்கான ஓவா்கள் 47-ஆகக் குறைக்கப்பட்டன. முதலில் பாகிஸ்தான் 47 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 42 ஓவா்களில் 271 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து டெஸ்ட்: முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்கா கைப்பற்ற, ஒருநாள் தொடரை பாகிஸ்தான் வென்றுள்ளது. டெஸ்ட் தொடா் 26-ஆம் தேதி தொடங்குகிறது.