செய்திகள் :

`ஒரு கொலை இல்லை... இரண்டு கொலை’ - கோவை போலீஸை அதிரவைத்த வாக்குமூலம்

post image

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். விசைத்தறி நெசவு தொழிலாளியாக இருந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தன் வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளங்கோவன்

இதுகுறித்து கருமத்தம்பட்டி  போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இளங்கோவன் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர், அமிர்தராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமிர்தராஜ் தன் மனைவி விஜயலட்சுமியுடன் வசித்து வந்தார். அவருக்கு  அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருடன் பழக்கம்  ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி, அமிர்தராஜ் இடையே அடிக்கடி பிரச்னையாகியுள்ளது.

அமிர்தராஜ்

கோபமடைந்த அமிர்தராஜ் விஜயலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு சதி திட்டம் தீட்டினர்.

இளங்கோவனுக்கு தெரிந்த லாரி ஓட்டுநர் ஒருவரிடம் பேசியுள்ளனர். விஜயலட்சுமி மீது லாரியை மீது ஏற்றி கொலை செய்துவிட்டு, அதை விபத்து போல அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். மனைவி இறந்தப் பிறகு அமிர்தராஜ் காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டு,

சாலை விபத்து

விஜயலட்சுமி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்தையும் பெற்றுள்ளார். பிறகு அமிர்தராஜ் கலைவாணியுடன் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அமிர்தராஜின் வீட்டில் இளங்கோவன் வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டை காலி செய்யுமாறு இளங்கோவனிடம் அமிர்தராஜ் கூறியுள்ளார். அதற்கு இளங்கோவன், “விஜயலட்சுமி கொலை வழக்கை காவல்துறையிடம் சொல்லி விடுவேன்.” என்று கூறி மிரட்டியுள்ளார்.

கலைவாணி
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

இதனை தொடர்ந்து காதலி கலைவாணியுடன் இணைந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொலை செய்துள்ளார். இந்த சமபவம் தொடர்பாக, அமிர்தராஜ், கலைவாணி உள்ளிட்ட 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

குஜராத்: போலி மருத்துவர்கள் தொடங்கிய மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சிக்கியது எப்படி?

போலி மருத்துவர்கள் இணைந்து பெரிய மருத்துவமனையைத் தொடங்கி ஒரே நாளில் மாட்டிக்கொண்ட சம்பவம், குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றுள்ளது. சூரத்தின் உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட விருந்தி... மேலும் பார்க்க

Whatsapp : வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பகிர்ந்த மெட்டா; ரூ.213 கோடி அபராதம் விதித்த CCI ஆணையம்!

உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல தளங்களை இயக்கி வருகிறது. இதில் பாமர மக்கள் வரை சென்ற தளம்தான் வாட்ஸ்அப். இலவச வீடியோ, ஆடியோ கால், இளைஞர்களை கவரும் வகை... மேலும் பார்க்க

சென்னை: பெண் இன்ஜினீயர் கொடுத்த பாலியல் புகார் - பாடகர் குருகுகன் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஒருவர், கடந்த 25.10.2024-ம் தேதி பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார் . அதில் கூறியிருப்பதாவது, ``சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

`யார், யாரிடம் இடங்களை அபகரித்தார்?' - என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரௌடி சீசிங்ராஜா வீடுகளில் ரெய்டு

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சீசிங் ராஜா, சென்னை கிழக்கு தாம்பரத்தில் வசித்து வந்தார். நில விவகாரம் தொடர்பான கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபட்டு வந்த சீசிங்ராஜா மீது 6 கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 39 ... மேலும் பார்க்க

போலி பணி ஆணை; ரூ.99 லட்சம் மோசடி... கைதான ஊராட்சி மன்றத் தலைவி - காங்கிரஸில் சலசலப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே அமைந்துள்ளது கொல்லஞ்சி ஊராட்சி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சலோமி இந்த ஊராட்சி மன்ற தலைவியாக இருந்துவருகிறார். இவர் மகிளா காங்கிரஸ் நிர்வாகியாகவும் உள்ளார். மா... மேலும் பார்க்க

வேலூரில் பிடிபட்ட யானை தந்தம் - பாஜக நிர்வாகி உட்பட 9 பேரிடம் வனத்துறை தீவிர விசாரணை

வேலூர் அடுத்துள்ள அரியூர் மலைக்கோடியைச் சேர்ந்தவர் சம்பத் (56). இவரின் வீட்டில் யானை தந்தம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனம் மற்றும் வனஉயிரின குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க