செய்திகள் :

ஒரே நாடு, ஒரே தேர்தல்: கூட்டுக்குழுவுக்கு பிரியங்காவை பரிந்துரைத்த காங்கிரஸ்!

post image

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து ஆய்வு செய்யவுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு பிரியங்கா காந்தியை காங்கிரஸ் பரிந்துரைத்துள்ளது.

மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வாக்கெடுப்பு மூலம் மசோதாவை தாக்கல் செய்தது மத்திய அரசு. தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்புவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார்.

ஆனால், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இறுதி முடிவை இதுவரை வெளியிடவில்லை.

இதையும் படிக்க : பாஜகவால் 272 வாக்குகளைகூட பெற முடியவில்லை! எப்படி மசோதாவை நிறைவேற்றுவார்கள்? காங்கிரஸ்

நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடர் வருகின்ற வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கூட்டுக்குழு உறுப்பினர்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மொத்தம் 31 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மக்களவையில் இருந்தும் 10 பேர் மாநிலங்களவையில் இருந்தும் இடம்பெறவுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் பிரியங்கா காந்தி, மனீஷ் திவார் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுக்தேவ் பகத் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரை கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

திரிணமூலில் இருந்து கல்யாண் பானர்ஜி, திமுகவில் இருந்து நெல்சன், சமாஜவாதியில் இருந்து தர்மேந்திர யாதவ் ஆகியோர் கூட்டுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா காந்தி வயநாடு எம்பியாக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கூட்டுக்குழுவில் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது!

அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... மேலும் பார்க்க

கர்நாடகம்: வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் நால்வர் பலி!

கர்நாடகத்தில் வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர்.கர்நாடகத்தில் குடிபள்ளி கிராமத்தில் இரண்டு மோட்டார் பைக்குகள் மீது வெற்று தக்காளிப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற மினிலாரி நேருக்குநேர... மேலும் பார்க்க

அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாகவே அம்பேத்கர் மீ... மேலும் பார்க்க

மும்பை: 85 பேருடன் சென்ற படகு விபத்துக்குள்ளானது! மாயமானோரை தேடும் பணி தீவிரம்

மும்பையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான எலிபேண்டா தீவுக்கு 80 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பெரிய படகின் மீது கடலில் சென்று கொண்டிருந்த சிறிய ரக படகு ஒன்று அதிவேகத்தில் மோத... மேலும் பார்க்க

கண்ணீர் புகைக்குண்டு வீசியதில் காங்கிரஸ் வழக்குரைஞர் பலி!

அஸ்ஸாமில் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டுகளால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காங்கிரஸ் வழக்குரைஞர் பலியானார்.மணிப்பூரில் அமைதியின்மை, அதானி வணிக நிறுவனத்தின் மீதான லஞ்சக் குற்றச்சாட்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: காங்கிரஸ் தொண்டர் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டில் காங்கிரஸ் தொண்டரை இருவர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சமீபத்தில் திருமணம் செய்த காங்கிரஸைச் சேர்ந்த அலோக் குமார் (28) என்பவர், பு... மேலும் பார்க்க