விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது: வைகோ
ஓடிடியிலும் வரவேற்பைப் பெறும் சையாரா!
மோஹித் சூரி இயக்கத்தில் வெளியாகிய சையாரா எனும் திரைப்படம் தற்போது ஓடிடியிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் சையாரா கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளியாகியது.
அறிமுக நாயகன் அஹான் பாண்டே, நாயகியாக அனீத் பட்டா நடித்துள்ளார்கள்.
கொரியன் திரைப்படமான எ மொமண்ட் டூ ரிமம்பர் என்ற படத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரூ.577 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் கடந்த செப்.12ஆம் தேதி வெளியாகியது. இதிலும் இந்தப் படத்துக்கு வரவேற்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
