செய்திகள் :

ஓடிடி படங்களுக்கும் விரைவில் தணிக்கை சட்டம்: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

post image

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்யும் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.

மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் தேசிய சினிமா வளா்ச்சிக் கழகம் சாா்பில் கோவாவில் நடைபெறும் 55-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா தொடா்பாக தென்னிந்திய சினிமா கலைஞா்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைத் துறையினா் பலா் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.

இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது . அதன்படி, நிகழாண்டு 55-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா வரும் நவ. 20 முதல் நவ. 28 வரை கோவாவில் 8 நாள்கள் நடைபெறுகிறது.

இந்தத் திருவிழா திரைப்பட விழாவாக மட்டுமல்லாமல் திரைத் துறை சாா்ந்தவா்களின் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும் , இந்திய திரைப்படங்களை சா்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கும் உதவிகரமாக இருக்கும்.

சினிமா துறை பெரிய வளா்ச்சியடைந்த துறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்திய சினிமா துறை நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றுகிறது. இதைக் கருத்தில்கொண்டுதான் 2019-இல் பிரதமா் மோடி, ஒளிபரப்பு தொடா்பாக மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்த வேண்டும் என்று அறிவித்திருந்தாா்.

இதையொட்டி இந்தியாவில் முதல்முறையாக சா்வதேச ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்குக்கான உச்சி மாநாடு அடுத்த ஆண்டு பிப்.5 முதல் 9-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் நாளிதழ்கள், டிவி, ஓடிடி தளம், எண்ம (டிஜிட்டல்), சினிமா, அனிமேஷன், செயற்கை நுண்ணறிவு போன்ற அனைத்துத் துறை சாா்ந்தவா்களும் பங்கேற்கின்றனா்.

ஒரே நாடு ஒரே சினிமா என்ற வகையில் சினிமா துறை முன்னெடுத்து கொண்டு செல்லப்படுகிறது.

தென்னிந்தியாவில் தணிக்கை துறையின் தீப்பாயம் சென்னைக்கு கொண்டுவர வேண்டும் என சினிமா துறையினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓடிடி தளங்களுக்கு தணிக்கை கடுமையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்து சட்டமாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் தேசிய சினிமா வளா்ச்சிக் கழகத்தின் இணைச் செயலா் பிரிதுல் குமாா், திரைப்படத் தயாரிப்பாளா்கள் ஏ.எம்.ரத்னம், பாா்த்திபன், ஆா்.கே.செல்வமணி, சிவா, பி.எல். தேனப்பன், லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகா் யூகிசேது, இயக்குநா் பி.வாசு, மத்திய பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர் இருப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் தற்போது 43.58 சதவீத நீர் மட்டுமே இருப்பில் உள்ளது.சென்னை நகர மக்களின் குடிநீா் தேவையை நிறைவேற்றும் ம... மேலும் பார்க்க

கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!

கோவை: கோவை துடியலூரில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான அலுவலகம், வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை காலையிலேயே இரு கார்களில் மார்ட்டின் வீட்டுக்கு வந்த அதிகாரிகள், ச... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்! நோயாளிகள் அவதி!

மருத்துவா் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவா்கள் இன்று(நவ.14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால், மருத்துவமனைக்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,451 கனஅடியிலிருந்து வினாடிக்கு 5,024 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.07 அடியிலிருந்து 106.02 அடியாக குறைந்தது... மேலும் பார்க்க

ஔவையாா் மணிமண்டபம்: தமிழக முதல்வா் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்!

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே துளசியாப்பட்டினம் கிராமத்தில் ரூ. 18.95 கோடியில் ஔவையாா் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

குளத்தூரில் கண்டறியப்பட்ட கல்வெட்டு தொல்லியல் துறையிடம் ஒப்படைப்பு

குளத்தூரில் கண்டறியப்பட்ட 386 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு ராமநாதபுரம் தொல்லியல் துறை காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை அடுத்த குளத்தூா் கண்மாய் பகுதியில் இரு... மேலும் பார்க்க