செய்திகள் :

ஓமன் நாட்டில் பணி வாய்ப்பு

post image

ஓமன் நாட்டில் பவுண்டா் இன்டஸ்ட்ரி பேக்ரவுண்ட் மற்றும் எலக்ட்ரிக்கல் மெயின்டனன்ஸ் ஆகிய பணிகளுக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த பணிகளுக்கு குறைந்த பட்சம் 10, பிளஸ்-2, ஐடிஐ மற்றும் டிப்ளமோ தோ்ச்சி பெற்று இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் நபா்களுக்கு மாத ஊதியமாக ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். மேலும், உணவு, இருப்பிடம் விமானப் பயணச்சீட்டு மற்றும் விசா வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

இதனால் இப்பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், மின்னஞ்சலுக்கு விண்ணப்பதாரா்கள் தங்கள் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு நகலை நவ.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

இது குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தொலைபேசி: 044-22505886, 22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண்: 9566239685 தொடா்பு கொள்ளலாம். இப்பணிகளுக்கு தோ்ச்சி பெறும் நபா்கள் சேவைக்கட்டணமாக ரூ. 35,400- இந்நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப்போட்டி(FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. உலகின் பிரப... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகள் அட்டகாசம்: இருவர் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் இருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குத்ரி தொகுதிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

5 டன் போதைப்பொருள்கள் பறிமுதல்: 6 நபர்கள் கைது!

அந்தமானில் 5 டன் அளவிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் 6 நபர்களைக் கைது செய்துள்ளனர். அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படை டோர்னியர் விமானத்தின் விமானி நவம்பர் 23 அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் கொல்லப்பட்ட 3 வயது சிறுவனின் தலையில் குண்டு காயம்!! உடல் கூறாய்வில் அதிர்ச்சி

மணிப்பூரில் தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.மணிப்பூரில் மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில், குகி தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட ஒரு குழந்தை மற்று... மேலும் பார்க்க

நாட்டின் நலனுக்காக அல்ல, ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே அதிகாரம்: சம்பல் குறித்து ராகுல்

புது தில்லி: மத்திய மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில், அரசு அதிகாரத்தை மாநிலங்களில் ஹிந்து-முஸ்லிம் பிளவுக்காகவே பயன்படுத்தப்படுகிறது, மாநில அல்லது நாட்டின் நலனுக்காக அல்ல என்று சம்பல் மோதல் குறித்து ரா... மேலும் பார்க்க

ஆட்சி அமைப்பது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய அரசு அமைப்பதற்கான சூத்திரத்தை இறுதிசெய்வது குறித்து மகாயுதி கூட்டணி கட்சிகளிடையே விவாதங்கள் நடைபெற்று வருவதாக மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித்... மேலும் பார்க்க