செய்திகள் :

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

post image

காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்

ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 4) ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஓவர்டான் இருவரும் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்க, இரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசிப் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஒவ்வொரு ஓவருமே மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாததாகவே இருந்தது. ஜேமி ஸ்மித்துக்குப் பிறகு, ஜேமி ஓவர்டானும் ஆட்டமிழக்க ஜோஷ் டங் களமிறங்கினார். ஜோஷ் டங்கும் ஆட்டமிழந்தால், கிறிஸ் வோக்ஸ் களமிறங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இங்கிலாந்து அணி இருந்தது.

தோள்பட்டை காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்குவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. ஆனால், அவர் பேடினை அணிந்து நின்றது காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக பேட்டிங் செய்ய தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியது.

பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜோஷ் டங் போல்டாகி வெளியேற, ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஆடுகளம் புகுந்தார் கிறிஸ் வோக்ஸ். இங்கிலாந்து அணி, இந்திய அணி ரசிகர்கள் என அனைவரும் கிறிஸ் வோக்ஸுக்கு சிறப்பான வரவேற்பை அளித்து உற்சாகப்படுத்தினர்.

வலியையும் பொருட்படுத்தாமல் அணிக்காக கிறிஸ் வோக்ஸ் ரன்கள் எடுக்க ஓடியது ரசிகர்கள் அனைவரின் இதயங்களையும் வென்றது. அவர் பந்துகளை எதிர்கொண்டு விளையாடாவிட்டாலும், அணிக்காக காயத்துடன் தைரியமாக களமிறங்கியது பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

England's Chris Woakes won the hearts of fans by coming to bat for the team despite his injury

கேப்டன் பொறுப்பை எளிதாக்கிய முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா: ஷுப்மன் கில்

முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் கேப்டன் பொறுப்பை எளிதாக்கியதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடை... மேலும் பார்க்க

வெளிநாட்டு மண்ணில் முதல்முறை... இந்திய அணியின் தனித்துவமான சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை சமன்செய்த முகமது சிராஜ்!

இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை முகமது சிராஜ் சமன் செய்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடை... மேலும் பார்க்க

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; டெஸ்ட் தொடர் சமன்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது... மேலும் பார்க்க

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஹாரி ப்ரூக் படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெ... மேலும் பார்க்க