செய்திகள் :

'கடனை கட்டு!' நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெகிழ்ந்த தொழிலாளி

post image

திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு காரத்தி (வயது: 13) என்ற 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். மோகனின் வருமானத்தை நம்பி மொத்தக் குடும்பமும் இருப்பதால், அவரது சொற்ப வருமானத்தில் அல்லல் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். அதோடு, கடன் வாங்கி குடும்பச் செலவுகளை சமாளித்து வந்துள்ளனர். இந்நிலையில், குடும்பத் தேவைக்காக பாலக்கரை பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் மோகனின் மனைவி வள்ளி கடன் வாங்கியுள்ளார். இதற்கிடையே, வள்ளிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி, சென்னை, புதுச்சேரி மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்றும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், வள்ளி வாங்கிய கடன் வட்டியோடு, 90,000 ரூபாயாக மாறியதால், அதனை உடனடியாக கட்ட வலியுறுத்தி, மோகனிடம் குழுத் தலைவி உள்ளிட்டோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், வாடகை வீட்டில் இருக்கும் மோகன் மற்றும் அவரது மகனை, பணம் தராவிட்டால், வீட்டை காலி செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். மனைவியின் சிகிச்சைக்காக ஏற்கனவே லட்சங்களில் கடன் வாங்கி மோகன் செலவு செய்த நிலையில், தற்போது தினந்தோறும் வாழ்வாதாரத்திற்கே போராடி வருகிறார்.

பிரதீப் குமார் (திருச்சி மாவட்ட ஆட்சியர்)

இருந்தாலும், மகனை நன்றாக படிக்க வைக்க விரும்பும் மோகன், தொடர் மிரட்டல் காரணமாக மனவேதனைக்குத் தள்ளப்பட்டார். தனது சூழலை எடுத்துச் சொல்லி, கால அவகாசம் கேட்டும், அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த, மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம், கண்ணீர் மல்க மோகன் தனது பிரச்னைகளை குறிப்பிட்டு கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், 'எனது மகன் நன்றாக படிக்க வைக்க வேண்டும். அதற்குரிய உதவி செய்ய வேண்டும். அதற்காக, எனது மனைவி வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார். அதனைத் தொடர்ந்து, அவரது கோரிக்கையை ஏற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மோகன் மனைவி வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு உள்ளார். அதையடுத்து, மோகனை அழைத்த மகளிர் திட்ட அதிகாரிகள், அவரது மனைவி வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யப்பட்ட விபரத்தை எழுத்துப்பூர்வமாக வழங்கினர். இதனால், பெருமகிழ்ச்சி அடைந்த மோகன், திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். அதோடு, தனது மகனின் கல்விக்கும் உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், மோகன் பேசுகையில், ``நான் மார்க்கெட்டில் கூலி வேலைப் பார்த்து, அந்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தேன். குறைந்த வருமானம் என்றாலும், இருப்பதை வைத்து நிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். கடன் வாங்கினாலும் அதை வருமானத்தின் ஒரு பகுதியில் எடுத்து சரியாக கட்டி வந்தோம். இதனால், குடும்பத் தேவைக்காக எனது மனைவி குழுவில் கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. அதற்காக, நிறைய செலவு செய்ததால், பலரிடமும் கடன் வாங்கினேன். இருந்தாலும், என் மனைவியை காபந்து பண்ண முடியவில்லை. அவளை எமனுக்கு வாறிக் கொடுத்துட்டு, என் மகனோடு நிர்கதியானேன். இந்த நிலையில்தான், என் மனைவி வாங்கிய கடனை உடனே வட்டியோடு திருப்பிக் கட்ட வேண்டும் என்று நெருக்கடி தந்தனர். நான் நிலைமையைச் சொல்லி, கால அவகாசம் கேட்டேன். ஆனால், மறுத்துடுவிட்டனர்.

மோகன்

அதோடு, வாடகையும் கொடுக்க முடியாமல் சிரமபட்டேன். பேசாமல் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசித்தேன். அப்போதுதான், நன்றாக படிக்கும் என் மகனை நினைத்தேன். அவனுக்காக வாழணும்னு நினைச்சேன். அதனால், இந்த கடனை மட்டும் தள்ளுப்படி செய்யச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தேன். என் கோரிக்கையை நிறைவேற்றி, என் குடும்பத்தை காப்பாத்தி இருக்கிறார். அவரது இந்த உதவியை என் காலத்துக்கும் மறக்கமாட்டேன். இனி, கடன் வாங்காமல் என் உழைப்பில் வரும் வருமானத்தை வைத்து, என் மகனை முன்னுக்கு கொண்டு வருவேன். என் மனைவி ரத்தப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். எங்களிடம் பணம் இல்லாத காரணத்தினால், அவளைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே, என் மகனை மருத்துவராக்குவேன். பலருக்கும் இலவசமாக வைத்தியம் பார்க்க வைப்பேன்" என்றார் உணர்ச்சி மேலிட!

''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை

''எங்கம்மா அப்போ அஞ்சு மாச கர்ப்பிணியா இருந்தாங்க. ஒருநாள் அங்கன்வாடிக்காக தண்ணி எடுத்துட்டு குடத்தை இடுப்புல வெச்சுக்கிட்டு நடந்து வந்திருக்காங்க.அந்த நேரத்துல யாரோ ஒருத்தர் டூ வீலரை அம்மா மேல மோதியி... மேலும் பார்க்க

`இனிமே பயப்பட மாட்டேன்கா..!’ - விபத்தில் கால்களை இழந்த விஜய்; கடை வைத்து கொடுத்த விகடன் வாசகர்கள்

ரயில் விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யையும், 'கால் இல்லைன்னா என்ன; தாலிக்கட்ட கை தானே வேணும்' என்று, விஜய்யை மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவைய... மேலும் பார்க்க

``ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..'' - நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்... மேலும் பார்க்க

VKT Balan: 'பலருக்கும் இன்ஸ்பிரேஷன்' - மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் காலமானார்!

மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவால் காலமானார்.டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி. பாலன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தன்னுடைய... மேலும் பார்க்க

`கால்பந்து என்றால் அவனுக்கு உயிர்; நிச்சயம் சாதிப்பான்!'- மகன் கனவை நனவாக்கும் மாற்றுத்திறனாளி தந்தை

கடந்த திங்கள் அன்று நடிகர் மம்மூட்டி, விளையாட்டு வீரர் PR ஶ்ரீஜேஷ் உட்பட பலர் பங்குபெற்று பிரமாண்டமாக நடைபெற்ற துவக்க விழாவில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது, மைதானத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்த ஹாஷிம்... மேலும் பார்க்க