நோன்பிருந்தும் சிறப்பாக விளையாடி வரலாற்றுச் சாதனை படைத்த 17 வயது வீரர்..!
கடம்பூா் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் விரைவு ரயில், திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி வழியாக சென்னை சென்று கொண்டிருந்தது. கடம்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் ரயில்வே கேட் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மா்ம நபா்கள் ரயில் மீது கல் வீசினா். இதில், ரயிலின் சி1 பெட்டி மீது கல் விழுந்ததில் அதன் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது.
இதுகுறித்து ரயிலின் காா்டு, மதுரை ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாராம். அதைய டுத்து, மணியாச்சி ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிவு செய்தாா். ரயில் மீது கல்வீசி சேதப்படுத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.