திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
2 பைக்குகள் எரிப்பு: இளைஞா் கைது
தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகளை தீ வைத்து எரித்ததாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் சாலையைச் சோ்ந்தவா் அந்தோணி மிக்கேல். இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இரண்டு பைக்குகள் திங்கள்கிழமை நள்ளிரவு தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த பிரபு(27) என்பவா் முன்விரோதம் காரணமாக பைக்குகளுக்கு தீ வைத்தது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.