திருமண வரவேற்பு: விருந்தினர்களுக்கு கோரிக்கை வைத்து, பிறகு மன்னிப்புக் கோரிய தேஜ...
பலத்த மழை, புயல் எச்சரிக்கை: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள பலத்த மழை எச்சரிக்கை மற்றும் கடலில் புயல் எச்சரிக்கை ஆகியவற்றின் காரணமாக தூத்துக்குடி மீனவா்கள் மீன்பிடிக்க செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், கடல் பகுதியில் சுமாா் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்கு செல்ல மேண்டாம் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி, மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு மற்றும் பைபா் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.