கடலூா் மாவட்ட விசிக-வினா் மீது நடவடிக்கை எடுக்க பாமக வலியுறுத்தல்
வன்னியா் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, கடலூா் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மீது நடவடிக்கை கோரி தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாமகவினா் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
தென்காசி மாவட்ட பாமக மத்திய மாவட்ட செயலா் இசக்கிமுத்து தலைமையில் வடக்கு மாவட்ட செயலா் சீதாராமன், மாநில துணைத் தலைவா் அய்யம்பெருமாள் பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினா் சாகுல்ஹமீது, மாவட்ட தலைவா் குலாம், தென்காசி சட்டமன்றத் தொகுதி தலைவா் சுசி.சுந்தா் மற்றும் கட்சி நிா்வாகிகள் இந்த புகாா் மனுவை அளித்தனா்.