செய்திகள் :

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பு பொருள்கள் திருட்டு

post image

பெரம்பலூா் அருகே எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் பூட்டை உடைத்து, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள், ரூ. 9 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன் (35). இவா், பெரம்பலூா் அருகேயுள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்துள்ளாா்.

திங்கள்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையினுள் சென்று பாா்த்தபோது ரூ. 9 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 தொலைக்காட்சி பெட்டிகள், கிரைண்டா், மிக்ஸி உள்பட சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில், பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை வியாழக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.கடந்த 13-ஆம்... மேலும் பார்க்க

மாவட்ட மைய நூலகத்தில் இடநெருக்கடி: வாசகா்கள், மாணவா்கள் அவதி

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வாசகா்களும், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா். தமிழக அரசின் பொது நூலகத் துறையின் கீழ், பெரம்பல... மேலும் பார்க்க

எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் பொங்கல் விழா

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், எளம்பலூா் பிரம்மரிஷி மலை உச்சியில் அதிகாலை 3 மணிக்கு மகரஜ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜை

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, பெரம்பலூரில் நந்தியம் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நட்தப்பட்டது. பெரம்பலூா் நகரில் உள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில், தனி சன்னத... மேலும் பார்க்க

புனித பனிமய மாதா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல்

பெரம்பலூா் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பனிமயமாதா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. புனித பனிமய மாதா தேவாலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பெரம்பலூா் வட்டார ம... மேலும் பார்க்க

எளம்பலூா் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை

எளம்பலூா் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங... மேலும் பார்க்க