பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க உத்தரவிட முடியாது! உயர் நீதிமன்றம் திட்...
எளம்பலூா் பிரம்மரிஷி மலையில் பொங்கல் விழா
பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே எளம்பலூரில் உள்ள பிரம்மரிஷி மலையில் பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், எளம்பலூா் பிரம்மரிஷி மலை உச்சியில் அதிகாலை 3 மணிக்கு மகரஜோதி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, காலை 6 மணியளவில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள காகன்னை ஈஸ்வரா் திருக்கோயிலில் காகன்னை ஈஸ்வரருக்கும், அன்னை சித்தா் ஜீவ சமாதியிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையுடன், கோமாதா பூஜை நடத்தப்பட்டது. பின்னா், செப்பு பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தி 200-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கும், பொதுமக்களுக்கும் கரும்பு தானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை, ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் மகா சித்தா்கள் அறக்கட்டளை மெய்யன்பா்கள் செய்திருந்தனா்.