சீன செஸ் மோசடி: 3 கிராண்ட்மாஸ்டர்களுக்கு வாழ்நாள் தடை, 38 பேருக்கு அபராதம்!
எளம்பலூா் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பெரம்பலூா் ஆட்சியரகம் முற்றுகை
எளம்பலூா் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் எளம்பலூா் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராம ஊராட்சி உள்ளிட்ட 4 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், எளம்பலூா் ஊராட்சியைச் சோ்ந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் பி. பெரியசாமி தலைமையில் நகராட்சியுடன் தங்களது கிராமத்தை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இதனால் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு நலத் திட்டங்கள், சலுகைகள் தங்கள் கிராமங்களுக்கு கிடைக்காது எனக் கூறியும், நகராட்சியுடன் இணைப்பதை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் மறு பரிசீலனை செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனா்.
பின்னா், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.